தமிழகம்

காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் மின் இணைப்பு இல்லாததால் பத்திர பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி : அமைச்சர் தொகுதியில் நடந்த ஏறிய அவல நிலை

69views
வேலூர் மாவட்டம் காட்பாடியில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது காட்பாடி தாலுகாவை சார்ந்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இங்கு நாள்தோறும் பத்திரப்பதிவு செய்து வருகின்றனர் மேலும் திருமணப்பதிவு என பல்வேறு பதிவுகள் இங்கு நடைபெற்று வருகின்றது. இதனை அடுத்து இன்று மாதாந்திர பராமரிப்புக்கு மின் நிறுத்தம் இன்று காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது.p இந்த நிலையில் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் யுபிஎஸ் மற்றும் ஜெனரேட்டர் வசதி இருந்தும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இன்று காலை உடனே பத்திரப்பதிவு செய்ய முடியாமலும் திருமண பதிவு செய்ய முடியாமலும் ஆண்கள் பெண்கள் வயதானவர்கள் உள்ளிட்டோர் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.
தற்பொழுது சார்பதிவாளராக இருந்து வரும் கவிதாவிடம் இதுகுறித்து கேட்டதற்கு முறையான பதில் அளிக்காமல் சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறைக்குள் ஒளிந்து கொண்டார்.  மேலும் யுபிஎஸ் மற்றும் ஜெனரேட்டர் வசதி வேண்டும் முன்கூட்டியே என்று மின் இணைப்பு துண்டிக்கப்படுவதும் தெரிந்து இருந்தும் அதிகாரிகளின் இத்தகைய அலட்சியப் போக்கு பொதுமக்களிடையே கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களது சொந்த தொகுதியிலேயே சார் பதிவாளர் அலுவலகம் இருளில் மூழ்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஏற்கனவே இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் விழாவில் முழுமையாக பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.  சுப முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்கள் ஏமாந்து காத்துக் கொண்டிருந்ததும் புது மஞ்சள் தாலியுடன் வந்த தம்பதிகள் காத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் கூறும்போது பத்திரப்பதிவு செய்ய வரும் நபர்களிடம் மூஞ்சை சுளித்தபடி அலுவலத்தை விட்டு விரட்டும் அவல நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது எனவும் லஞ்சபணம் கொடுத்து பத்திர பதிவு செய்ய வரும் சில புரோக்கர் களிடமும் பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து பத்திர எழுத்தாளர்களிடம் மட்டும் சிறித்தமுகத்துடன் அறைக்குள் அழைத்துச் சென்று லஞ்ச பணத்தைப் பெற்றுக் கொண்டு பத்திர பதிவு செய்து வருவதாக ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது பத்திர பதிவு செய்ய வரும் பொதுமக்களை விரட்டியடிக்கும் இந்த சார்பதிவாளர் கவிதா மேல் உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமா? பத்திர பதிவுத்துறை என பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!