தமிழகம்

காட்பாடியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த 13 பன்றிகள் பிடித்து அகற்றம்

75views
வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் உத்தரவின் பேரில், பொதுமக்களிடமிருந்து புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால் மண்டலம் 1,வார்டு 9,10,14 ஆகிய பகுதியில் குறிப்பாக பொதுமக்கள் வாழும் பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை மண்டலம் 1 காட்பாடி சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் தலைமையில், பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு 13 பன்றிகள் பிடித்து அப்புறப்படுத்தப்பட்டது. பன்றிகளை வளர்க்கும் உரிமையாளர்களிடம் பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது என கருதி, பொது சுகாதாரம் சட்டத்தின் படி வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது, மண்டலம் 1 சார்பில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பன்றிகளால் பரவும் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு அபாயகரமான நோய்களை மனிதர்களுக்கு தாக்காமல் இருக்கவும், காப்பாற்றும் பொருட்டும் வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலத்துக்கு உட்பட்ட சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் செய்து வரும் சேவைகளை பொதுமக்கள் தொடர்ந்து வெகுவாக பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!