தமிழகம்

பொதுமக்களிடம் மெகா வசூல் வேட்டை நடத்தும் காட்பாடி சார் பதிவாளர்

1.06Kviews
தன்னை நாடி வரும் பொதுமக்களிடம் மெகா வசூல் வேட்டை நடத்துவதில் கில்லாடியாக உள்ளார் காட்பாடி சார் பதிவாளர் சிவக்குமார்.  வேலூர் மாவட்டத்தில் காட்பாடி என்று சொன்னாலே பணம் கொழிக்கும் இடம் என்று ஒரு பெயர் உள்ளது. அது வருவாய்த்துறையாக இருந்தாலும் சரி, அது காவல்துறையாக இருந்தாலும் சரி, அது சார் பதிவாளர் அலுவலகமாக இருந்தாலும் சரி, வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட மண்டல அலுவலகமாக இருந்தாலும் சரி என்று சொல்லும் அளவிற்கு அனைத்து அரசு அலுவலகங்களிலுமே பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் நிலை தான் இங்கு நிலவி வருகிறது. இதற்கு தான் காட்பாடியில் எந்த பணியிடமாவது நிரப்பப்பட வேண்டும் என்றால் பணிபுரிவோருக்குள் கடும் போட்டோ போட்டி அனைத்து துறைகளிலுமே அரசு துறைகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இருந்து வருகிறது ஶ்ரீன் குடியாத்தம் சார் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து ஹெட் கிளார்க்காக பணியாற்றி வந்த சிவக்குமார் காட்பாடிக்கு பொறுப்பு சார் பதிவாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
இவர் என்றைக்கு சார் பதிவாளர் பொறுப்பு பதவியை ஏற்றாரோ அன்று முதல் அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருப்பவர் போன்று கதை கதையாக அவிழ்த்து விடுகிறார் .இந்த புளுகு மூட்டைகளை நம்ப யாரும் தயாராக இல்லை . இந்நிலையில் இவர் தன்னை நாடி வரும் பொதுமக்களிடம் கராறாக பணத்தை வசூல் செய்து விடுகிறார். அத்துடன் எந்த வேலைக்கு எவ்வளவு வாங்க வேண்டும் என்பதையும் பட்டியலிட்டு வைத்துக் கொண்டு பணத்தை கறந்து விடுகிறார் இந்த மாமனிதர். இதை வெளியில் யாரும் சொல்லி விடக்கூடாது என்பதற்கும், தனது காட்டில் பண மழை கொட்டுகிறது என்பதையும் யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக பத்திரிகையாளர்களுக்கு நாய்க்கு எலும்பு துண்டு போடுவது போல மாதா மாதம் ரூபாய் 250 ரூபாய் 300 வரை ஒரு நபருக்கு கொடுத்துவிட்டு அவர்களை நாயை போலவே விரட்டி விடுகிறார். அவர்களும் இது போன்ற உண்மை தகவல்களை வெளியில் கசிய விடாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
இப்படி ஒரு விசுவாசமான செய்தியாளர்கள் கூட்டம் வேலூர் மாவட்டத்தில் உலா வருகின்றனர் என்கின்றனர் பொதுமக்கள். இப்படி சிறிய மீனை போட்டு பெரிய மீனை முழுவதுமாக அமுக்கிக் கொண்டு வீடு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்த கடமை வீரன் சிவக்குமார் என்று சொன்னால் அது மிகையாகாது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண் கொத்தி பாம்பாக காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தின் மீது தங்களது பார்வையை செலுத்தினால் சிவக்குமார் போன்ற திமிங்கலங்கள் கட்டாயம் சிக்கிக் கொள்ளும் என்பது உறுதி. இவரை சந்திக்கும் நபர்கள் செய்தியாளர்களாக இருந்தாலும் சரி, பொதுமக்களாக இருந்தாலும் சரி, அவர்களிடம் தன்னை ஒரு உத்தமன் போலவும் லஞ்சமே வாங்காதவர் போலவும் உலக மகா நடிப்புகளை இவர் வெளிக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி ஆவார். மாதம் ஒன்றுக்கு ரூபாய் 15 லட்சம் வரை இந்த காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தின் வாயிலாக பல்வேறு வழிகளில் இவர் சம்பாதிப்பதாக அலுவலகத்தின் தரப்பிலிருந்தும், புரோக்கர்கள் தரப்பிலிருந்தும் கதை கதையாக கூறப்படுகின்றது. பணத்தை கொடுத்தால் போதும் எதையும் இவர் முடித்துக் கொடுக்க ஆயத்த நிலையில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிவக்குமாருக்கு தேவை எல்லாம் பணம் ஒன்று தான் வேறு எதுவும் தேவை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவரது பணி மிகவும் தூய்மையானதாகவும், பணம் ஒன்றே குறிக்கோளாக கொண்டும் செயல்பட்டு வருகின்றார் என்பதை அவர் மேற்கொள்ளும் காரியங்களே வெட்ட வெளிச்சமாக தெரிவித்து விடுகிறது. இது போன்ற நபர்களை காட்பாடியில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு நல்லதொரு சார் பதிவாளரை காட்பாடிக்கு நியமிக்க வேண்டும் என்று பொதுமக்களும், செய்தியாளர்களும் எதிர்பார்க்கின்றனர் .தான் லஞ்சமே வாங்கவில்லை என்று மார்தட்டும் சிவக்குமார் ஏன் பத்திரிகையாளர்களுக்கு கையூட்டு கொடுக்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது.
ஒரு நேர்மையான அதிகாரி செய்தியாளர்களை பார்த்து ஏன் பயப்பட வேண்டும் என்பதும் விடை தெரியாத கேள்வியாக உள்ளது. அவரவர் செய்தியாளர்கள் என்றும், தன்னை ஒரு செய்தி நிறுவனத்தின் உரிமையாளர் என்றும், செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் என்றும் பல கோணங்களில், பல வடிவங்களில் பல பொறுப்புகளை சொல்லி அவரிடம் பணம் பெறுவதை குறிக்கோளாகள கொண்டு செயல்படுகின்றனர். இதனால் நாம் தான் டாப் டூ பாட்டம் வரை பணம் கொடுக்குறோமே பிறகு நம்மை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்ற தெனாவெட்டில் இவர் பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி லஞ்ச லாவண்யத்தை நம்பி எத்தனை நாளைக்கு இவர் காட்பாடியில் குப்பை கொட்டுகிறார் என்பதை பத்திர பதிவுத்துறை அதிகாரிகளும், பத்திர பதிவுத்துறை அமைச்சரும், தமிழக முதல்வரும்தான் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்கின்றனர் நடுநிலையாளர்களும், செய்தியாளர்களும் என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழக அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!