தமிழகம்

காட்பாடியில் 12 அடி நீள மலைப்பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர்

81views
வேலூர் மாவட்டம், காட்பாடி வண்டறந்தாங்கல் அடுத்த கொல்லமேடு பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் 12 அடி நீளம் உள்ள மலைப் பாம்பு சுற்றித்திரிந்தது .இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தீ யணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவல் பேரில் காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன், பால்பாண்டி ஆகியோர் தலைமையில் முன்னணி தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். அங்கு 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு மரத்தின் உச்சியில் ஏறி இருந்ததை ஜேசிபி இயந்திரம் உதவியுடன் மரத்தை சாய்த்து மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து பாம்பை ஒப்படைத்தனர். இதன் பின்னர் வனத்துறையினர் மலைப்பாம்பை பத்திரமாக கொண்டு சென்று காப்புக்காட்டில் விடுவித்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!