தமிழகம்

காட்பாடி கழிஞ்சூர் ரோட்டில் ஹரீஷ் ஃபுட் சோன் திறப்பு விழா

35views
வேலூர் மாவட்டம், காட்பாடி கழிஞ்சூர் ரோட்டில் ஹரீஷ் ஃபுட் சோன் 5வது கிளை திறப்பு விழா நேற்று காலை கோலாகலமாக நடந்தது. திறப்பு விழாவில் கடையின் உரிமையாளர் வி. எஸ் .செந்தில்குமார் , அவரது துணைவியார் எஸ். நர்மதா ,வி.ஏ. ஹரி கிருஷ்ணன், என் .தீப்தி, ஹரீஷ் கேஸ் ஏஜென்சி உரிமையாளர் வி. எஸ். பர்வதம் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள், நண்பர்கள், வாடிக்கையாளர்கள் என பெருந்திரளாக பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த 5வது புதிய கிளையை ராணிப்பேட்டை ராம் லெதர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பாஸ்கரன் தனது பொற்கரங்களால் திறந்து வைத்து சிறப்பு செய்தார். திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று பொருள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பரிசு பொருட்களை வாரி வழங்கியது இந்த ஹரீஷ் ஃபுட் சோன் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!