தமிழகம்

காட்பாடி – திருவலம் சாலையில் டவுன் பஸ்சில் படிக்கட்டு பயணத்தில் அதிரடியாக கலக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

23views
வேலூர் மாவட்டம் காட்பாடியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுப்புறத்தில் இருந்து மாணவ-மாணவிகள் அரசின் பஸ்சில் இலவசமாக வந்து படித்து செல்கின்றனர்.  இதில் காட்பாடி பள்ளியில் படிக்க கார்ணாம்பட்டு, அரும்பருத்தி, லட்சுமிபுரம், சேவூர் பகுதியிலிருந்து மாணவ – மாணவிகள் வருகின்றனர்.  இதில் பஸ் உள்ளே மாணவிகள் உட்கார மாணவர்கள் இடம் இருந்தால்கூட புட்போர்டில் பயணம் செய்கின்றனர்.
பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தினமும் சண்டைபோடும் மாணவர்கள் அவர்களை அடிக்க கூட தயங்குவதில்லை.  குறிப்பாக சேவூர், லட்சுமி பகுதி மாணவர்கள் அட்டகாசம் காலை,மாலை என தொடர்கின்றது.  இதன் காரணமாக மற்ற பயணிகளும் அவதிப்படுகின்றனர்.  இதற்கு காட்பாடி போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!