தமிழகம்

காட்பாடி நாராயண இ – டெக்னோ பள்ளியில் இரும்பு கேட் விழுந்து வாச்மேன் உயிரிழந்த சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகம், செக்கியூரிட்டி நிறுவனத்தின் மீது குற்றசாட்டு

26views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பழைய காட்பாடியில் ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நாராயண இ – டெக்ணோ.சி.பி.எஸ். சி.பள்ளி நடந்துவருகின்றது. பல மாநிலங்களில் இந்த தொழிலதிபருக்கு பல பள்ளிகள் இருந்து வருகின்றன.  கடந்த 27-ம் தேதி காலையில் இந்த பள்ளியில் செக்கியூரிட்டி மெயின் கேட்டில் பணியின்போது உட்கார்ந்து இருந்தபோது இரும்பு கேட் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.
விசாரணையில் உயிரிழந்தவாச்மேன்காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தை சேர்ந்த ராமமூர்த்தி (60) என தெரியவந்தது.  இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி காவல்துறையினர் விரைந்து வந்து உடலை பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்துவருகின்றனர்.  இந்த இறப்பில் சந்தேகம் உள்ளதாக உள்ளதாக இறந்தவரின் மகன் கோபால் புகார் அளித்தார்.  அதன்பேரில் காவல்துறை விசாரணை செய்துவருகின்றது.
பள்ளி நுழைவுவாயிலில் இருந்த 6 அடி உயரம், 7 அடி அகலம் கொண்ட இரும்பு கேட்சுழன்று விழுந்து இறந்து உள்ளது தெளிவாக இருப்பதாக இறந்தவரின் உறவினர்கள் கூறுகின்றனர்.
இந்த நிகழ்வு நடந்ததால் பள்ளி மாணவர்கள் இறப்பு அல்லது காயம் அடைந்து இருப்பார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.  லட்சக்கணக்கில் பெற்றோர்கள் நன்கொடை மற்றும் கல்வி கட்டணத்தை கொடுத்து இந்த பள்ளியில் சேர்த்து உள்ளதால் மாணவர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா? என்ற கேள்விகுறியாக உள்ளது.

இந்த இறப்புக்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. தொடர்ந்து இந்த பள்ளி நிர்வாகம் மெத்தன போக்கை கடைபிடித்து வருகின்றது.  காட்பாடி காந்திநகர் இ.பி.பஸ்ஸ்டாப் அருகில் இந்த தனியார் செக்கியூரிட்டி நிறுவனம் உள்ளது.  செக்கியூரிட்டி உரிமையாளரும் இந்த உயரிழுப்புக்கு காரணம், இவர்கள் தங்களிடம் பணிபுரியும் செக்கியூரிட்டிகளுக்கு சரியான சம்பளம், சலுகை கொடுப்பதில்லை.  இறந்த செக்கியூரிட்டி உரிமையாளர் எந்த இழப்பீடும் கொடுக்கவில்லை.  இந்த செக்கியூரிட்டி கம்பெனியை அலுவலர்களை போலீஸ் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரீக்கை ஆகும்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!