தமிழகம்

காட்பாடியில் 5 பேர் கொண்ட ரவுடி கும்பலை அதிரடியாக கைது செய்த காவல்துறை

109views
ஆந்திர மாநிலத்தில் வனப்பகுதிகளில் அதிகயளவு விலை உயர்ந்த செம்மரங்கள் உள்ளன. இவற்றை வெட்டி கடத்தி சட்டவிரோதமாக காட்பாடி வேலூர் வழியாக கடத்திவரப்பட்டு வெளிமாநிலம், நாட்டிற்கு கடத்தப்பட்டு வருகிறது.  அதன்படி ஆந்திராவிலிருந்து செம்மரம் ஏற்றி வரும் லாரியை கடத்தி செல்ல இருப்பதாக வேலூர் எஸ்.பி.மணிவண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் காட்பாடி டிஎஸ்பி.பழனி தலைமையில் காவல்துறையினர் காட்பாடி, விருதம்பட்டுபகுதிகளில் உள்ள தங்கும் விடுதி சோதனை செய்தனர் அப்போது விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கி இருந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த வசூல்ராஜா (36) மோகன் குமார் (34 ) வேலூர் சதீஷ்குமார் (34 ), காங்கேயநெல்லூர் சையத் மன்சூர் (38) கவுஸ் பாஷா (31) என்பது தெரியவந்தது.  இவர்களை தீவிர விசாரணை செய்தபோது, இந்த ரவுடிகள் ஆந்திராவிலிருந்த செம்மரம் கடத்தி வரும் லாரியை மடக்கி இவர்கள் கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.  5 பேரை கைது செய்த காவல்துறை, அவர்களிடமிருந்து கத்தி, உருட்டுகட்டை, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!