தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் தோட்டிகோடு மௌனகுரு மடத்தில் சமூக சேவகர் மருத்துவர் தி.கோ. நாகேந்திரனுக்கு “ஜீவஜோதி” பட்டம்

123views
கன்னியாகுமரி மாவட்டம் தோட்டிகோடு மௌனகுரு திரு மடத்தில் 19- 8- 2024 திங்கள்கிழமை இன்று பவுர்ணமி நாளில் இராமலிங்க சுவாமிகள் அகவல் பா திரட்டு திரளான பக்தர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. மௌனகுரு மடத்தின் தர்மகர்த்தா சுகதேவன் சுவாமிகள் நல்லாசியோடு பெரியவர் இரத்தின மணி அவர்கள் முன்னிலை வகிக்க கொரோனா காலகட்டத்தில் பசிப்பிணியை போக்க பணி செய்தமைக்காக “ஜீவஜோதி” என்ற பட்டத்தை மடத்தின் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வேலாயுதம் அவர்கள் தலைமையில் சுகதேவன் சுவாமிகள் நல்லாசியோடு பல சாது சன்னியாசிகள் முன்னிலையில் பெற்ற மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் சமூக சேவகர் தலைமை ஏற்க கவிமணி தேசிய விநாயகம் அவர்கள் தனது 19ஆவது வயதில் அழகிய சோழ நங்கை மீது ” அழகம்மை ஆசிரியை விருத்தம்” எனும் பக்தி நெறி ததும்பிய பத்து பாடல்களை தேவிதாசன் வேலப்பனார் தேரூர் பாடினார்.

ஒவ்வொரு பாடலுக்கும் கவிமணி நற்பணி மன்றத்தின் செயலர் கவிமணி நேசன் புலவர் கு .சிவதானு அவர்கள் கருத்துரை வழங்கி அரங்கேற்றம் செய்யப்பட்டது. கோமாதா பூஜை திருமதி .ரமா சேசேஸ்ரன் திருமதி. பத்ம ஸ்ரீ ஆகியோர் ஏற்பாடு செய்ய தர்மகர்த்தா அவர்களின் நல்லாசியுடன் சிறப்பாக நடைபெற்றது.

மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் ( கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி ) முன்நிலை வகிக்க பெரியவர் இரத்தின மணி திருநைனார் குறிச்சி அவர்கள் சமபந்தி தொடங்கி வைத்தார்.
பல வருடங்களாக அன்னதானத்தை ( கொரோனா முழு ஊரடங்கு நேரத்திலும் ) நடத்தி வருகின்ற அன்னதான வித்தகர் சுகதேவன் சுவாமிகள் அவர்களுக்கு அனைவரின் சார்பாக திரு. இரத்னமணி அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். கலந்து கொண்ட அனைவரும் அறுசுவை உணவு உண்டு இறை ஆசியோடு திரும்பினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!