தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சைமன் நகரில் இரண்டு நாள் தொடர் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

250views
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சைமன் நகரில் இரண்டு நாள் தொடர் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது . சைமன் நகர் பூங்கா மைதானத்தில் திருமதி.மெர்லின் பிரபா முன்னிலை வைக்க திரு .ஜான் தலைமை ஏற்க திருவள்ளுவர் அறக்கட்டளை மற்றும் நேதாஜி நற்பணி மன்றம் இணைந்து நடத்தியது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக புன்னை நகர் புகழ் சூர்யா குழுமத்தினரின் இசை கச்சேரியை பசுமை நாயகன் தி..கோ.நாகேந்திரன் ( கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி ) மூவர்ண கொடியை அன்பளிப்பாக கொடுத்து விழாவை தொடங்கி வைத்தார். தேசப்பற்று மிக்க பல்வேறு பாடல்களை செவிக்கு உணவாக அளித்தனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்குபெறும் வகையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ,தனி திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள், நலத்திட்டங்கள் , மரக்கன்றுகளை வினோகித்தல் ஆகியவை நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு லிங்கம் அண்ட் கோ உரிமையாளர் வள்ளிநாயகம், மரு .தி. கோ. நாகேந்திரன் சமூக சேவகர், தலைவர் ஜான் ஆகியோர் இணைந்து பரிசுகளை வழங்கினார்கள்.
மரு. தி. கோ. நாகேந்திரன் ( திருவள்ளுவர் அறக்கட்டளையின் ஆலோசகர் ) பேசுகையில் இந்த சுதந்திர தின விழாவில் பங்குபெற்ற அனைவரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள் குறிப்பாக வேலு நாச்சியார், குயிலி ,பாரதியார் போன்றவர்களின் சரித்திரங்களை தத்ரூபமாக நம் முன்னே நிறுத்திய குழந்தைகளை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.நாம் ஒவ்வொருவரும் இயற்கையையும் நம் நாட்டையும் உலக ஒற்றுமையையும் சிறப்படைய செய்வதோடு நம் நாட்டை முன்னோடியாக கொண்டு வர ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற பணியை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

நற்பணி மன்றத்தின் சார்பாக சிறப்பு விருந்தினர்களை பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். செல்வி ஜான்சி மலர் நன்றியுரை கூற தமிழ் தாய் வாழ்த்து உடன் தொடங்கிய விழா தேசிய கீதத்துடன் இனிதே நிறைவுற்றது. இவ்விழாவில் பெருவாரியான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!