தமிழகம்

எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்ற உலகப் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

353views
எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்ற உலகப் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கமும் பொதுமக்களுக்கு போதை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினோகித்தும் அனைவரையும் கவரும் வகையில் போதை விழிப்பு பேரணியும் ரெட் கிராஸ், பாரத் சாரண சாரணியர், தேசிய பசுமை படை மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். போதை விழிப்பு கருத்தரங்கள் தமிழ் தாய் வாழ்த்து பள்ளி மாணவியர்கள் பாட திருமதி வி.நாகம்மாள் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலை வகிக்க பி. சுப்ரமணியன் முதல்வர் வாழ்த்துரை வழங்க தலைமை ஆசிரியர் வி. சுப்பிரமணியன் பள்ளிச் செயலாளர் தலைமை ஏற்க பல வருடங்களாக மக்களிடையே தொடர்ந்து போதை விழிப்புணர்வு கொடுத்துக் கொண்டிருப்பவரும் திரு.சுனில் குமார் ஐபிஎஸ், அடிஷனல் டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் கிரைம் அவர்களிடமிருந்து ஜூலை 2016 -இல் பாராட்டு பெற்ற சிறப்பு விருந்தினர் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் சமூக சேவகர் உரையாற்றி பின்னர் பேரணியையும் கொடியாசைத்து தொடங்கி வைத்து கருத்தரங்கில் பேசினார்.

அவ்ப்போது, ஒரு தனி மனிதன் போதைக்கு அடிமை ஆவதால் தனது மனநிலையும் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதோடு சமுதாயத்திற்கும் பெரும் சுமையாக அமைவார்கள் இதுவே நாட்டுக்கும் வீட்டிற்கும் கேடை சேர்க்கும் ஏன் உலகிற்கே கேடு விளைவிக்கும் சூழ்நிலையை கொண்டு வரும் எனவே நாம் போதைக்கு அடிமையாகாமல் தனிமனித ஒழுக்கத்தோடு சான்றோர் பெரியோர் நல்வழியில் பயணிப்பது சிறப்பு . போதைக்கு அடிமையானவர்களை கேலி செய்யாமல் அவர்களை மீட்டெடுக்க சம்பந்தப்பட்ட துறைகளை நாடி தீர்வு காண உதவி செய்ய வேண்டும் .நமக்கு தெரியாத புரியாத அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கின்ற தின்பண்டங்களை உண்ணுவதோ அதை நாம் அறிந்து பிறர் உண்ணுவதால் ஏதேனும் விபரீதங்கள் ஏற்படுமாயின் தலைமை ஆசிரியரிடமோ காவல்துறையிடமோ அல்லது பெற்றோர்களிடமோ தெரிவிக்கவும் என்றார்.

பல வருடங்களுக்கு முன்னால் எஸ்.எம்.ஆர்.வி பள்ளி மைதானத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகளும் ஆசிரியபெருமக்களும் பெற்றோர்களும் தலைமை ஆசிரியர் வி.நாகம்மாள் தலைமையில் சிறப்பு விருந்தினர் மருத்துவர் தி.கோ.நாகேந்திரன் சமூக சேவகர் அவர்களால் கூறப்பட்ட பொன்மொழிகளான “கற்போம் கற்போம் மனிதநேயத்தை பாதுகாக்க கற்போம்”, “கற்போம் கற்போம் போதை இல்லா வாழ்வினை வாழ கற்போம்”, “கற்போம் கற்போம் மது இல்லா மாண்பினை போற்றக் கற்போம்”, “கற்போம் கற்போம் நம் நாட்டை பாதுகாக்க கற்போம்”, “கற்போம் கற்போம் உலக ஒற்றுமையை பாதுகாக்க கற்போம்” என கோஷங்களை மாணவ மாணவிகள் உரக்க கூறினார்கள்.
சாலையில் செல்வோர்களிடமும் கடைகளிலும் ஆட்டோ ஓட்டுநர்களிடமும் போதை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினோகித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளிச் செயலாளர் வி . சுப்பிரமணியன், பி. முத்துக்குமார், என். நாகேஸ்வரி, கே.மீனாட்சி ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் எஸ் .எஸ்.ஆர்.வி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி முற்றிலும் மாறுபட்டு அனைவருக்கும் பயன் உள்ளதாக அமைந்தது என்பது திண்ணம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!