தமிழகம்

ஓசூரில் தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபையின் சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது

291views
பாசிச பாஜக ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வஃக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. தலைமை :-மௌலானா ஹாபிஸ் நயிம் ஜான். அவர்கள்.மாவட்ட துணைத் தலைவர். ஜமாஅத்துல் உலமா சபை, முன்னிலை A.எஹ்சாணுல்லாகான் முத்தவல்லி ஜாமியா மஸ்ஜித் ஓசூர்,S.சையத் ஷபியுல்லா முத்தவல்லி. ஜம்மியத்தே அஹ்லே ஹதீஸ் ஓசூர், சம்ஷீர் பேக் ஜாமியா மஸ்ஜித் செயலாளர். ஒசூர், தொகுப்புரை, S.முசமில் கான் ஜாமியா மஸ்ஜித் தலைவர், I.நூர் மதினா மஸ்ஜித். அவர்கள் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக முஃப்தி கலீல் அஹமது சாஹிப் மசாஹிரி மாவட்ட அரசு தலைமை காஜி ஜமாத்துல் உலமா கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் அவர்கள். கலந்து கொண்டனர்.
மேலும்..கண்டன பொதுகூட்டத்தில். கண்டனத்தை பதிவு செய்த.. கே. கோபிநாத் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர். INC, Y.பிரகாஷ் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திமுக. மு.தமீமுன் அன்சாரி BA. EX.MLA தலைவர். மஜக, T.இராமச்சந்திரன் தளி சட்டமன்ற உறுப்பினர் CPI. S. A சத்யா ஓசூர் மாநகர மேயர் திமுக, A.அல்தாப் அஹமது மாநிலச் செயலாளர். (தமுமுக) ஓசூர் S.நவ்ஷாத் மாநிலத் துணைச் செயலாளர். (மஜக) S.இம்தியாஸ் மாநில இணை பொது செயலாளர் AIMIM, மௌலவி சையத் அக்ரம் கர்நாடக மாநில செயலாளர் எஸ்.டி.பி.ஐ, A.ஜாக்கிர் ஆலம் மாவட்டத் தலைவர். தமுமுக., S.ஆதில் மாவட்டச் செயலாளர் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (CPI) குண்டு முகமது பைசான், தலைமை கழக பேச்சாளர் IUML, ஆகியோர் கண்டன உரையாற்றினர்,
A.சிக்கந்தர் அமீன் மாநில செயற்குழு உறுப்பினர் மமக, R.ஷபியுல்லா மாவட்டத் தலைவர் எஸ்.டி.பி.ஐ, B.சாதிக் கான் மாநிலத் துணைத் தலைவர் சிறுபான்மை பிரிவு இந்திய காங்கிரஸ், S.k.சையத் ஷபியுல்லா மாவட்ட தலைவர் AIMIM, G.s.சையத் நிசார் சிறுபான்மை மாவட்ட துணை அமைப்பாளர். திமுக. ஆகியோர் கண்டன கோஷங்கள் எழுப்பினர் .  இந்த பொதுக்கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சி இயக்கங்களுடைய தலைவர்கள் நிர்வாகிகள், என அனைத்து பள்ளிவாசல் முத்துவல்லி மற்றும்உறுப்பினர்கள். மொஹல்லா வாசிகள் இளைஞர்கள் பொதுமக்கள் என ஐந்து (5000)ஆயிரத்திற்கும் மேற்பட்ட டோர். கலந்து கொண்டனர்,

இந்தபேரணிமற்றும் கண்டன பொதுக் கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
1.அண்மையில் ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள வக்ஃபு திருத்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வழிபாட்டு உரிமைகளுக்கும் தனிமனித உரிமைகளுக்கும் எதிரானது; இந்திய முஸ்லிம்களை வேட்டையாடும் கெடுநோக்கம் கொண்டது; முஸ்லிம்களைத் தனிமைப்படுத்துவதை இலக்காகக் கொண்டது என்று உறுதியாக நம்புகிறோம். இச்சட்டத்தைக் கொண்டுவந்ததற்கு ஒன்றிய அரசு கூறும் காரணங்கள் ஏற்கத்தக்கவை அல்ல. குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் தடை சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து என சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து ஓரவஞ்சனையோடு சட்டங்களை இயற்றிவரும் ஒன்றிய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.
2.தமிழ்நாடு சட்டமன்றத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தீர்மானத்தை ஆதரித்த எதிர்க்கட்சிகளுக்கும் உளங்கனிந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார். இந்தத் தீர்மானம், ஃபாசிசத்திற்கு எதிரான தத்துவப் போரில் வெற்றிக்கனியைப் பறிப்போம் என்கிற புதிய நம்பிக்கையை இந்திய மக்களின் இதயங்களில் விதைத்துள்ளதை எண்ணி பெருமகிழ்வு கொள்கிறோம்.  இத்தீர்மானத்தை பாஜக அல்லாத எல்லாக் கட்சிகளும் ஆதரித்துள்ளதன் மூலம் தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சியை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டியிருக்கிறது.  பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தமது சட்டமன்றங்களில் இதுபோன்ற தீர்மானங்களை இயற்றுவதோடு இதுபோன்ற கருப்புச் சட்டங்களை எங்கள் மாநிலங்களில் நாங்கள் செயல்படுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்.
3.மக்களாட்சி தத்துவமும் மதச்சார்பின்மையும் பேராபத்துக்கு ஆளாகி நிற்கும் இந்த நெருக்கடியான சூழலில், சிறுபான்மையினருக்கு எதிரான ஒன்றிய அரசின் பெரும்பான்மைவாத ஃபாசிசப் போக்கினைக் கண்டித்து பாராளுமன்றத்தில் துணிச்சலாக மாபெரும் கருத்துப் போர் ஒன்றை நடத்தி, இந்திய மக்களின் மனசாட்சியாக எதிரொலித்த I.N.D.I.A கூட்டணி உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். 4.வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், தனிநபர்கள் ஆகியோருடைய முயற்சிகளை வெகுவாகப் பாராட்டுகிறோம். இவ்வழக்கில் தேவையான ஒத்துழைப்புகளை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் சட்டக்குழு வழங்கும்.
5.ஆன்மிகத்தின் தொட்டிலாகவும் அறநெறிகளின் சோலையாகவும் திகழ்ந்து வந்த இந்திய தேசத்தை, மதவெறியின் வேட்டைக்காடாக மாற்றும் வண்ணம், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பரப்புரையை நிறுவனமயப்படுத்தி, குடிசைத் தொழில்போல அதை நாடெங்கும் நிறுவி நடத்திவருகின்ற சனாதன அமைப்புகளின் தீய கரங்களிலிருந்து சிறுபான்மையினரைக் காப்பாற்ற எல்லா மாநில அரசுகளும் சிறப்புச் சட்டங்களை இயற்ற வேண்டும்.
6.சமூக ஊடகங்களிலும் அரசியல் மேடைகளிலும் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பரப்புரை செய்து, சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து, மக்கள் மனங்களில் நஞ்சை விதைத்து, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் தீய சக்திகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஏதுவாக சிறப்புப் புலனாய்வுப் பிரிவு ஒன்றை மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என்று கவலையோடும் அக்கறையோடும் வலியுறுத்துகிறோம்.
செய்தியாளர் : A முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!