தமிழகம்

முதுகுளத்தூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

19views
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு மையங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பரமக்குடியில் மாவட்டச் செயலாளர் என் எஸ் பெருமாள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் என்.கே ராஜன், கே ஆர் சுப்பிரமணியன், மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி செல்வராஜ், டி எம் சிவக்குமார், எம் பி ருக்மாங்கதன், விஜயபாஸ்கர் கே ஜி நாகநாதன், ஹரிகரன், எம் கோட்டைச்சாமி, வி ஆர் நாகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராமேஸ்வரம் நகர் குழு சார்பில் நகர செயலாளர் சி ஆர் செந்தில் வேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர், எஸ் முருகானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர் ஜீவானந்தம் மற்றும் கிளை நிர்வாகிகள் தோழர்கள் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூர் தாலுகா கமிட்டி சார்பில் முதுகுளத்தூர் தாலுகா செயலாளர் எஸ் எம் ஜெயசீலன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டங்களில் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!