தமிழகம்

மனிதக் கழிவை மனிதர் அகற்றும் சட்டம் 2013 க்கு திருத்தம் செய்யும் எண்ணம் அரசின் வசம் இல்லை நாடாளுமன்றத்தில் சமூக நீதி அதிகாரமளித்தல் இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பதில் : உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கண்டனம்

106views
மனித கழிவை மனிதர்கள் அகற்றும் இழிவு நிலைக்கு முடிவு கட்ட வேண்டும். கழிவுகளை கையால் அகற்றும் வேலைக்கு தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் (எம்எஸ்) 2013 ன் கீழ் கையால் மனித கழிவுகளை அகற்றும் வேலை கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 6ந் தேதி முதல் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டது, அன்று முதல் யாரும், எந்த நிலையிலும் கழிவுகளை கையால் அகற்றுவதற்கு துய்மை தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது என சட்டம் இயற்றப்பட்டது.
மனிதக் கழிவை மனிதர் அகற்றுதல் தடை மற்றும் மறுவாழ்வு சட்ட திருத்த வரைவு 2020 என்ன நிலைமையில் உள்ளது? என நாடாளுமன்றத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு (எண் 694/27.05.2023) சமூக நீதி அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்துள்ள பதில் துய்மை பணியாளர்களுக்கு பேர் அடியாக அமைந்துள்ளது.
அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ள பதில் மனித கழிவை மனிதர் அகற்றுதல் தடை மற்றும் மறுவாழ்வு சட்ட திருத்தவரைவு 2013 க்கு திருத்தம் செய்யும் எண்ணம் எதுவும் அரசின் வசம் இல்லை என்ற அதிர்ச்சிகரமான பதிலை கூறியுள்ளார்.
மனித கழிவை அகற்றுவதற்கு மனிதர்களை ஈடுபடுத்தினால் தண்டனை விதிக்கவும் இந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்றளவும் இந்த சட்டம் காகித அளவில் மட்டுமே இருக்கிறது. மனிதர்களை அந்த பணியில் ஈடுபடுத்துவோர் மீது வழக்கு பதிவு செய்து குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் சமூக நீதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் “ஸ்வச்சதா உதாமி யோஜனா” என்னும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி அனைத்து மாநிலத்திலும் உள்ள மனித கழிவுகளை அகற்றும் பணியில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து மனித கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களுக்கு “ஸ்வச்சதா உதாமி யோஜனா” திட்டத்தின் மூலம் 5 லட்சம் வரை இயந்திரம் ஆக்கப்பட்ட உபகரணங்களுக்கு 50% மானியத்துடன் வழங்கும் கடன் திட்டத்தை அனைத்து மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களும் பயன் பெறும் வகையில் உறுதிப்படுத்த வேண்டும்.
எனவே மனிதக் கழிவை மனிதர் அகற்றுதல் தடை மற்றும் மறுவாழ்வு சட்ட திருத்த வரைவு 2020 என்பது கழிவு அகற்றுவதை முழுமையாக இயந்திரமயம் ஆக்குவதே நோக்கம் என்ற தகவல்கள் தான் தரப்பட்டு இருந்தன. இத்தகைய சட்டம் துப்புரவுப் பொறியியலை மேம்படுத்துவது, இயந்திரமயப்படுத்துவது ஆகிய முன் முயற்சிகளுக்கு உதவி செய்யக் கூடும். ஆனால் நாடாளுமன்றத்தில் அமைச்சர் அளித்துள்ள பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சட்ட திருத்த வரைவு 2013 உள்ளடக்கத்தை முழுமையாக இயந்திரமயத்தை உறுதி செய்ய வேண்டும். 2013 சட்டத்தை மேலும் உறுதிபடுத்த வேண்டும். இல்லை என்றால் மனிதக் கழிவை மனிதரே அகற்றும் கொடுமையை ஒழிக்க முடியாது. என உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!