தமிழகம்

வேலூரில் காமராஜர் பிறந்தநாள் முன்னிட்டு ராஜீவ் காந்தி ஆட்டோ ஒட்டுநர் நலச்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

48views
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் 121 பிறந்தநாள் முன்னிட்டு ராஜீவ் காந்தி ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் 18-ம் ஆண்டு விழா நடந்தது.  நிகழ்ச்சிக்கு ஆட்டோ சங்க மாநகர செயலாளர் முனியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.  சிறப்பு அழைப்பாளராக காங்.கமிட்டி மாநகர செயலாளர் டீக்காராமன் துப்புரவு பணியாளர்களுக்கு ஆடைகள், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் பின்பு உணவு வழங்கினார்.
மூத்த காங்கிரஸ் பிரமுகர் ஆண்ட்ரூஸ், சிறுபான்மை பிரிவு வாகித் எஸ்.சி. பிரிவு பொதுச்செயலாளர் சித்தரஞ்சன், காட்பாடி ஒன்றிய செயலாளர் இளங்கோ, சட்ட ஆலோசகர் பாலமுருகன், ஆட்டோ சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  ஆட்டோ சங்க பொருளாளர் விவேக் ஆனந்தன் நன்றி கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!