தமிழகம்

வேலூர் அரசு அருங்காட்சியகம் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு பேச்சு போட்டி பரிசளிப்பு விழா

368views
வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகம் சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு கலைஞரும் தமிழும் என்ற தலைப்பில் பேச்சு போட்டி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடந்தது.  இதில் சத்துவாச்சாரி வ.ஊ.சி.நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் லிங்கேஸ்வரன் முதல்பரிசும், வித்யா நிகேதன் பள்ளி மாணவிமோனிஷா 2-ம் பரிசும், 3-ம் பரிசு முறையே அன்னை மெட்ரிக் பள்ளி மாணவி காவ்யா, வ.ஊ.சி.பள்ளி மாணவி வனிதாவும் பெற்றனர்.

இவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் நிகழ்ச்சியில் வேலுர் மாவட்ட டாக்டர்கலைஞர் கருணாநிதி அறிவியல் மைய அலுவலர் இர. இரவிக்குமார் வழங்கி சிறப்புரையாற்றினார்.  வேலூர் அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் க.சரவணன் வரவேற்றார்.  ஊரீசு கல்லூரி முன்னாள் தமிழ் பேராசிரியர் திருஇன்ப எழிலன், குண்ராணி அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் அன்னையா , வேலூர் லோட்டஸ் தொடக்க பள்ளி தாளாளர் கு.பிரபாகரன் ஆகியோர் பேசினர்.  பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.  அருங்காட்சியக தொழில்நுட்ப உதவியாளர் மு. தமிழரசன் நன்றி கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!