தமிழகம்

கடையநல்லூரில் இசை முரசு நாகூர் ஹனிபா நூற்றாண்டு விழா

40views
கடையநல்லூர் பிப்ரவரி 03
கடையநல்லூர் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் இசை முரசு மர்ஹூம் நாகூர்
இ எம் ஹனிபா நூற்றாண்டு விழா மற்றும் பேராசிரியர் ஹாமீம் முஸ்தபா எழுதிய சூரிய பிறை நூல் அறிமுக விழா கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 02-02-25 அன்று நடைபெற்றது
விழாவிற்கு எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் தலைமை வகித்து சூரிய பிறை நூல் அறிமுக உரையாற்றினார்.
பள்ளியின் நிர்வாகி ஏ ஜி செய்யது முகைதீன் சாஹிப் வல்லநாடு துளசி பெண்கள் சட்டக் கல்லூரி முதல்வர் வழக்கறிஞர் முகமது முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் விஸ்வா செல்லப்பா சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நல்லாசிரியர் கே எஸ் ரசூல் அகமது இப்ராஹிம் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் நெல்லை கே ஜே அப்துல் மஜீத் சமரசம் பொறுப்பாசிரியர் வி எஸ் முகமது அமீன் பேராசிரியர் முனைவர் காயல் ப.மு. கண்ணன் எம்ஏ மகபூப் எஸ் எம் முகமது காசிம் பேராசிரியர் ஹாமீம் முஸ்தபா ஆகியோர் நாகூர் ஹனிபா வாழ்க்கை வரலாற்றை பேசினார்கள்
விழாவில் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்ஏ முகமது கோயா திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஓ எம் ஏ காதர் எஸ் கே அப்துல் மஜீத் எம் எஸ் இஸ்மத் காஜாமுகைதீன் மூத்த பத்திரிகையாளர் புளியங்குடி சாகுல் ஹமீது , சேயன் அப்துல் காதர் ஹிதாயத்துல் இஸ்லாம் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ் எஸ் அல் அமீன் உட்பட ஏராளமான பேர் விழாவில் பங்கேற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!