தமிழகம்

ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்களின் குழந்தைகளிடம் பசு போல பவ்யமாகவும் ஜல்லிக்கட்டு போட்டி என்றால் அடக்க வரும் வாலிபர்களிடம் சீறும் சிறுத்தையாக மாறும் “காளைகள்”

239views
தை திருநாள் “பொங்கள் பண்டிகை” அன்று அவனியபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும்.  தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்காக தயராகும்”காளைகள்”
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் வரும் ஜனவரி 14 அன்று தைப்பொங்கலை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறுவதற்காக அவனியாபுரம் பகுதியில் உள்ள காளைகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதற்காக மாட்டின் உரிமையாளர்கள் நீச்சல் பயிற்சி நடைபெச்சி மற்றும் மண் மட்டும் பயிற்சியை காளைகளை பயிற்சி அளித்து வருகின்றனர்.
களத்தில் சிறுத்தைகள் போல் பாய்ந்து சென்றாலும் வளர்ப்பவர்களின் குழந்தையிடம் பவ்யமாக நடந்து செல்லும் காட்சி வித்தியாசமானது .

இது குறித்து ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் சிறுவர்கள் கருப்பசாமி, அரச பாண்டி ஆகியோர் கூறுகையில் தம்பி மாதிரி பழகுவோம். அவிழ்து விட்டால் பின்னால் வரும். மற்றவர்களை தொடவிடாது முட்டி தூக்கும். முனியசாமி என்பவர் கூறுகையில் இந்த ஆண்டு தைத்தியங்கள் முதல் நாள் அன்று நடைபெறும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை தயார் செய்து வருகிறோம்.

‘இதற்காக நீச்சல் பயிற்சி .மண் முட்டும் பயிற்சி, வாடிவாசல் உள்ளிட்ட பல்வேறு பயிற்ச்சிகள் வழங்கிவருகிறோம்.
பீட்டா அமைப்பு தடைகோருவது தவறு. உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கவேண்டும்.
நீதியரசர்கள் பீட்டாவிடம் கொசு கூட கடிக்கிறது. அதனை கொல்வது குற்றமில்லையா என கேட்டுள்ளனர். தமிழக முதல்வர் கண்டிப்பாக அவனியாபுரம் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடத்த உதவார் என கூறினர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!