தமிழகம்

அடையாள அட்டையை பெற்றுக் கொண்டார் கவிஞர் பேரா என்ற பே.இராஜேந்திரன்.

65views
தமிழ்நாடு ஒய்வூதியர் சங்கத்தின் நெல்லை மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று 12.04.2025 அரசு அலுவலர் ஒன்றிய அரங்கில் நடைபெற்றது.  காவல் துறை இலட்சுமண ராஜ் தலைமை வகித்தார்.  மாவட்ட துணைத் தலைவர் சீதாராமன் மற்றும் மாநில துணைத்தலைவர் நல்ல பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவிஞர் பே.இராஜேந்திரன்,மாநகராட்சி விஜயலட்சுமி,தேவிகா,மாரிக் கண்ணு உட்பட பலர் பேசினர்.  கூட்டத்தில் சங்க கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17-ஆம் தேதி பாளையங்கோட்டை சித்தா மருத்துவக் கல்லூரி அருகே நடக்க இருக்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.  கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைவழங்கப்பட்டது.
பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநர் கவிஞர் பே.இராஜேந்திரன் உட்பட அனைவருக்கும் துணைத் தலைவர் சீதாராமன் அடையாள அட்டைகளை வழங்கிப் பேசினார்.  கூட்டுறவுத் துறை அந்தோனிசாமி நன்றி கூறினார்.
கூட்டத்தில் மாநராட்சி ஓய்வு பெற்ற ஊழியர் விஜயலட்சுமி,சமுக நலத்துறையின் ஓய்வு பெற்ற ஊழியர் தேவிகா,கவிதாயினி பொன்னம்மாள்,பாடகர் மீனாட்சி நாதன்,வனத்துறை நடராஜன்,பத்திரப் பதிவுத் துறை பாஷ்யம் ,உட்பட அனைத்துத் துறை ஓய்வு பெற்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!