தமிழகம்

ஓசூரில் SDPI கட்சி எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் கைதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!.

68views
ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, பொய்யான குற்றச்சாட்டின் கீழ், அமலாக்கத்துறையால் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஸி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று (மார்ச்.05) எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதனடிப்படையில் கிருஷ்ணகிரி மேற்கு கிழக்கு இணைந்து மாவட்டத்தின் சார்பில் நடத்தும் ஓசூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் ஷபியுல்லா தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்டத் துணைத் தலைவர் பக்ருத் தீன், மாவட்ட பொதுச் செயலாளர் JKஜாவித் மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் கலில் செயலாளர் ராஜ்குமார் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொருளாளர் கலீம். தளி தொகுதி தலைவர் பாரூக்‌. பாலக்கோடு தொகுதி தலைவர் ஹைதர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட பொதுச் செயலாளர் ஷப்பீர் அகமது அவர்கள் வரவேற்பு உரையாற்றினார்.  மாவட்ட செயலாளர் ஜாவித் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விசாரணை ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்தி, ஜனநாயக சக்திகளை மிரட்டி ஒடுக்கும் பாஜக அரசின் அடக்குமுறைக்கு எதிராக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், எஸ்டிபிஐ கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் அஸ்கர் அலி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணை தலைவர் ஷானவாஸ் உள்பட பல்வேறு ஜனநாயக சக்திகளின் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, எதிர் குரல்களை ஒடுக்கும் பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராகவும், எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஸியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.
இறுதியாக மாவட்ட செயலாளர் சவுத் அகமது நன்றி உரையாற்றினார்
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!