தமிழகம்

தமிழக அரசின் “அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம் “என்ற தலைப்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புங்கவாடியில் 2023-24 கல்வி ஆண்டின் முதல் நாள் துவக்க விழா

169views
12.06.23 திங்கட்கிழமை அன்று காலை 10 மணிக்கு மங்கள வாத்தியம் முழங்க SMC உறுப்பினர்கள் சீர்வரிசையுடன் புதுமனை புகுவிழா போல் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு அளித்தனர் . இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் திரு டி. வேல்முருகன் அவர்கள் தலைமையில் குத்து விளக்கு ஏற்றி புதிதாய் சேர்ந்த மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களுடன் டிபன் பாக்ஸ்சை ரூபாய் 5000 மதிப்பில் நன்கொடையாக மாணவர்களுக்கு வழங்கி வரவேற்றார். இவ்விழாவில் ஆசிரியர்கள், ஒன்றிய குழு தலைவர் பரமேஸ்வரி வீராசாமி,SMC உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி வட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!