192views
தி கோட் – திரை விமர்சனம் :
இளைய தளபதி விஜய் நடித்து ஏஜிஎஸ் எண்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘ தி கோட்’
SATS என்று சொல்லக்கூடிய உலக பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்படும் சிறப்பு உளவு பிரிவின் மிக முக்கிய பொறுப்பில் இருப்பவர் காந்தி. உலக தீவிரவாத இயக்க தாதா ராஜீவ் மேனன். கென்யாவில் நடைபெறும் ஒரு ஆபரேஷனில் ட்ரைனில் வந்து கொண்டிருக்கும் போது தாக்கப்படுகிறார். அந்த தாக்குதலில் ராஜீவ் மேனன் குடும்பம் கொல்லப்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் காந்தி என்று நம்புகிறார் ராஜீவ் மேனன். எப்படியும் காந்தியை பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார். அதற்கு அவர் எடுக்கும் ஸ்டெப்ஸ் தான் படத்தின் ஒன் லைன்.
பாங்காக்கிற்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் காந்தி தன் ஐந்து வயது மகன் ஜீவனை பறிக் கொடுக்கிறார். இதனால் SATS அமைப்பே வேண்டாம் என்று ஒதுங்கி அமைதியாக இமிக்ரேஷன் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அமைப்பின் கட்டாயத்தின் பேரில் மாஸ்க்கோ செல்ல அங்கு இறந்து போனதாக நம்பிக் கொண்டிருந்த மகன் ஜீவனை சந்திக்கிறார். அதன் பிறகு காந்தியின் குடும்பத்தில் என்ன நடந்தது, பழி வாங்க காத்திருந்த ராஜீவ் மேனன் என்ன செய்தார். தீவிரவாதத்திற்கு எதிராக காந்தி எடுத்த முடிவுகள் என்ன போன்ற பல சந்தேகங்களுக்கு விடையாக அமைந்திருக்கிறது படத்தின் திரைக்கதை.
காந்தியாகவும், ஜீவனாகவும் இளையதளபதி விஜய் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பு ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா. ஜீவனை விட காந்தி ஸ்கோர் செய்துவிடுவதை தவிற்பதற்கில்லை. ஜீவன் நடிப்பில் இளமை துள்ளலுடன் வருவதை ரசிக்கலாம். காந்தியின் நண்பர்களாக 90 கிட்ஸ்களின் பேவரைட் ஆர்ட்டிஸ்ட் பிரபுதேவா, பிரசாந்த் இருவரும் வர அஜ்மல் இன்னொரு நண்பராக வருகிறார். அனைவருக்கும் நடிக்க போதுமான ஸ்பேஸ் இருப்பது போல் திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு.
காந்தியின் மனைவியாக ஸ்னேகா. பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். ‘அதென்னவோ காந்திக்கு வேற பொண்ணு மேல அப்பைர் இருக்குமோ’என்று கேட்கும் இடமாகட்டும் ஜீவன் உயிருடன் வீட்டிற்கு வரவும் போது காட்டும் ரியாக்ஸன் ஆகட்டும் சபாஷ் போட வைக்கிறார்.
லைலா பிரசாந்தின் மனைவியாக வந்து போகிறார். பிரபுதேவாவுக்கு ஜோடி இல்லை.
ராஜீவ் மேனனாக மைக் மோகன். உண்மையில் மோகனுக்கு இந்த படம் தான் கம் பேக் படம் என்று சொல்ல வேண்டும். ‘காந்தி வேஷம் போட்டு பார்த்திருக்கேன். முதன் முறையா காந்தி வேஷம் போட்டு இப்போதான் பாக்குறேன்’ சொல்லும் இடத்தில் தியேட்டரில் அப்லாஸ் பெறுகிறார் மனிதர்.
SATS அமைப்பின் தலைவர் நசீர் கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்திருக்கிறார்.. அவரின் காமெடியும் கண்டிப்பும் கலந்த நடிப்பு ரசிக்க முடிகிறது.
யோகிபாபு, பிரேம்ஜி, வைபவ், ஒய்.ஜி.மஹிந்திரா, ஜீவன் காதலியாக வரும் மீனாட்சி சௌத்ரி, பஞ்சு சுப்பு, கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன், திரிஷா இப்படி வழிநெடுக தெரிந்த முகங்கள்.
எந்த கேரக்டரையும் வேஸ்ட் செய்யவில்லை. அளவோடு பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்தின் கமர்ஷியலுக்கு மிக் முக்கிய பங்கு செய்திருக்கிறது. பாடல்களை விட பின்னணி இசையில் தியேட்டரை அதிர விடுகிறார் யுவன்.
மட்ட மட்ட , அவ கண்ணால பார்த்தா இரண்டு பாடல்கள் ரசிகர்களை கிறங்கடித்து ஆடவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சித்தாரத்த நுனி யின் கேமரா பயங்கர வேகம். கென்யாவில் ஓடும் ஒரு ரயில், தலைக்கு மேல் பறக்கும் ஹெலிகாப்டர், ரயிலுக்கு இணையாக ஓடும் ஜீப் என முதல் காட்சியிலேயே ஹாலிவுட் பீல் கொடுக்க எடுத்திருக்கும் பிரயர்த்தனம் படம் நெடுகவே தெரிகிறது.
வெங்கட் ராஜன் படத்தொகுப்பு வேகமான திரைக்கதைக்கு படு சுறுசுறுப்பாக துணை செய்திருப்பது சிறப்பு.
ராஜீவனின் ஆர்ட் ஒர்க் திரையில் காட்சிகளுடன் ஒன்ற முடிகிறது.
மாஸ்ட்டர், பீஸ்ட், லியோ இப்படி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த படங்களின் வரிசையில் கம்பீரமாக ரெட் கார்பெட் போட்டு அமர்ந்திருக்கிறது இந்த ‘கோட்’
லோகேஷ் கனகராஜ் சினிமா யூனிவெர்ஸ் போல இனி வெங்கட் பிரபுவின் சினிமா யூனிவெர்ஸ் ஆரம்பமாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
வெங்கட்பிரபு தன் முந்தைய படங்களின் சாயலை விடாமல் தொட்டுக் கொள்வதும், கிரிக்கெட் தன் யூஎஸ்பி என்பதை விட்டுக் கொடுக்காமல் இருப்பதும் பல இடங்களில் படம் சரிவதில் இருந்து முட்டு கொடுக்க துணை செய்கிறது.
படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் என்றாலும் அது விஜய் ரசிகர்ளுக்கு போனஸாக அமைதிருப்பது தான் வெங்கட்பிரபுவின் ட்ரிக்.
இன்னொரு தங்கப் பதக்கத்தை இளைய தளபதியை வைத்து நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கமர்சியல் படமாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் இயக்குனரின் துணிச்சல் வரவேற்க கூடியது.
மொத்தத்தில் அரசியல் பேசாமல் போனாலும், உள்ளரசியல் பேசுவதில் சளைக்காமல் ஸ்கோர் செய்திருக்கிறது இந்த ‘கோட்’
விமர்சனம் : RJ நாகா
add a comment