சினிமா

ஒட்டுமொத்த படத்தையும் சம்பவம் செய்கிறது ஒரு சம்பவம்

198views
திரைவிமர்சனம்:
தமிழ் சினிமாவின் பரிசார்த்த முயற்சிகளுக்கு மத்தியில் சிறு முன்னெடுப்பில் நகரும் படங்களும் மக்களால் கவனிக்கப்படுவது ரசனையின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும்.
எப்புரா …
படத்தின் பெயரை உச்சரிக்க நிறைய சிரமப்பட வேண்டாம். இயல்பாய் வெளிப்படுவது போல வெகு எதார்த்தமாக உருவாகி இருக்கிறது இந்தப் படம்.
ஒரு குறிப்பிட்ட நாளில் நள்ளிரவு 12 மணிக்கு நடக்கும் சம்பவத்தின் பிண்ணனியில் கதை ஆரம்பமாகிறது.
அந்த நள்ளிரவில் பெண் குழந்தையுடன் ஒருவன் ஓடுகிறான். இன்னொரு தெருவில் தலைதெறிக்க ஒரு இளைஞன் ஓட அவனை ஐந்து பேர் சேர்ந்த கும்பல் ஒன்று விரட்டுகிறது. இன்னொரு பக்கம் ஒரு காதல் ஜோடி உயிர் பயத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் ஏன் ஓடுகின்றனர். இந்த ஓட்டத்திற்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இருக்கிறதா… என்ற கேள்வியுடன் நம்மை படம் பார்க்க வைக்கின்றனர். படம் அங்கிருந்து ஓட ஆரம்பிக்கிறது.
பள்ளிக்கூடத்தில் இருந்தே காதல் கைகூடாத கதையின் முக்கிய கதாபாத்திரம் ஒன்று தற்கொலையை கையிலெடுக்கிறது. அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் தன் தற்கொலைக்கு தன் நண்பர்களை சாமர்த்தியமாக கோர்த்துவிடுவதில் கில்லாடியாக இருக்கிறான். பள்ளி, கல்லூரி, வேலைத்தேடும் தருணம் வரை இந்த காதல் தோல்வியும், தற்கொலை முயற்சியும் தொடர்கிறது.
சம்பவத் தினத்தன்று ஒயின் ஷாப்ப்பில் சாக இருப்பதாக நண்பனை அழைக்கிறான். அவனை தடுக்க நண்பனும் வருகிகிறான். அதன் பிறகு உண்டாகும் திருப்பங்களை திரைக்கதையின் மூலம் கலகலகலப்புடன் கொண்டு செல்கிறார் இயக்குனர். ஒட்டுமொத்த படத்தையும் சம்பவம் செய்கிறது இந்த சம்பவம்.
காமெடியா, திரில்லரா, சென்டிமெண்டா எந்த ஜார்னரில் செல்கிறது என்பதை தொடக்கத்திலேயே சொல்லி விடுவதால் நம்மால் இயல்பாய் படத்துடன் ஒன்ற முடிகிறது.
அநேகமாக படத்தில் எல்லோரும் புதுமுகங்கள்.
நாதோஷியா செயின்ட் ஜூலியன், கார்த்திக் சிவா, காலை கவியரசன், விஜய் முருகன், பிரதீப் செல்வராஜ் இப்படி ஸ்கோர் செய்பவர்களை பார்க்க முடிகிறது.
ஜான் ஜாஸ் ஜேபி யின் இசை படத்திற்கு பலம். பின்னணி இசையில் படத்திற்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டிருக்கிறது எனலாம்.
ஒளிப்பதிவில் கவனிக்க வைக்கிறார் டிஜே சக்தி. அதேபோல் படத்தொகுப்பில் நம்மை அசர வைக்கும் ஒருவர் அசோக்குமார் கர்ணா.
கதை, திரைகதை, வசனம் எழுதி இயக்கி இருப்பவர் ஏஆர் ராஜேஷ். முழுக்க பாண்டிச்சேரியில் நடைபெறும் கதையை நகைச்சுவை தொய்வில்லாமல் எந்த அறிவுரையும் சொல்கிறேன் பேர்வழி என்று துருத்திக்கொண்டு எதையும் சொல்லாமல் பொழுதுபோக்கு மட்டுமே கருத்தில் கொண்டு நேர்த்தியாக இயக்கி இருப்பதற்கு சபாஷ் போடலாம்.
ஒயிட் டௌன் பிலிம்ஸ் சார்பில் விஜய் முருகன் தயாரித்திருக்கும் இந்த ‘எப்புரா’ கலகலகலப்பாக பார்க்கலாம்.
இப்போதெல்லாம் வெகு எதார்த்த படங்கள் என்றால் பட்ஜெட் படங்கள் என்கிற பிம்பத்திற்குள் கொஞ்சமும் பிசகாமல் உருவாகி இருக்கிறது இந்த ‘எப்புரா’
-நாகா

1 Comment

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!