தமிழகம்

வருங்கால இளைய தலைமுறை வாழ்க்கையில் விளையாடுகிறதா தமிழக அரசு போக்குவரத்துக் கழக திருமங்கலம் கிளை நிர்வாகம் e

231views
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் காரியாபட்டி செங்கப்படை கள்ளிக்குடி கல்லுப்பட்டி காராம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது இதில் காலை பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் நேரங்களில் கிராமப்புறங்களில் இருந்து திருமங்கலம் நோக்கி வரக்கூடிய பேருந்துகள் சரிவர வருவது இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பாக காலை7.30 செங்கப்படையில் இருந்து புறப்பட்டு காராம்பட்டி வழியாக TN58N0571 என்கின்ற வராததால் இதற்கு அடுத்த பேருந்து காலை7.45 மணிக்கு TN58N1246 என்கின்ற பேருந்து மொத்தமாக மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் ஆபத்தான முறையில் படியில் பயணம் செய்யும் அவலம் தொடர்கதையாகவே ஆகிக்கொண்டிருக்கிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்களின் பெற்றோர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர் இதான் பள்ளி மாணவ மாணவிகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு படியில் பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வருங்கால இளைய சமுதாயத்தின் உயிர் பலி போவதற்கு முன் உரிய நேரத்தில் பேருந்துகளை இயக்கி வருங்கால சங்கதியை நலம் காக்க உரிய நடவடிக்கை எடுக்குமா போக்குவரத்து கழக நிர்வாகம்?
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!