கல்வி

தனி தேர்வர்கள் (Private candidate) 10-ஆம் வகுப்பு (SSLC) மற்றும் 11-ஆம் வகுப்பு (+1) , 12-ஆம் வகுப்பு (+2) தேர்வுகள் எழுத இப்போது விண்ணப்பிக்கலாம்!

42views
தனி தேர்வர்கள் (Private candidate) 10-ஆம் வகுப்பு (SSLC) மற்றும் 11-ஆம் வகுப்பு (+1) , 12-ஆம் வகுப்பு (+2) தேர்வுகள் எழுத இப்போது விண்ணப்பிக்கலாம்!
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26 டிசம்பர் (26-12-2024)
🎯 யாரெல்லாம் இந்த 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்விற்கு விண்ணப்பிக்க முடியும்?
👉 வீட்டிலிருந்தே படித்து 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வாளர்கள் (Private Candidates) விண்ணப்பிக்கலாம். எந்த வயதினரும் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 14 1/2 (பதினாளரை) வயது இருக்க வேண்டும்.
👉 கடந்த காலங்களில் 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்வு எழுதி சில பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அந்த குறிப்பிட்ட பாடங்களில் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற இப்போது விண்ணப்பிக்கலாம்.
👉 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
👉 9-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற / பெறாத மாணவர்கள் மற்றும் 9-ஆம் வகுப்பில் படிப்பை பாதியில் விட்டவர்கள்.
🎯 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 11-ஆம் வகுப்பு (+1) தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.*
🎯 11-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 12-ஆம் வகுப்பு (+2) தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
🎯 எங்கு விண்ணப்பிப்பது ?
தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்விற்க்கு விண்ணப்பிக்க சேவை மையங்களை (Service Centers) ஏற்படுத்தியுள்ளது. அங்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சேவை மையங்களின் முகவரி கீழ்காணும் லின்கில் உள்ளது.
https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1733309369.pdf
🎯 தேர்வு கட்டணம் :
10-ஆம் வகுப்பு – ரூ.125 + Late fee ரூ.500
11-ஆம், 12-ஆம் வகுப்பு – ரூ.255 + Late fee ரூ.1000
👉 விண்ணப்பித்த பிறகு ஒப்புகை சீட்டு தருவார்கள், இதை வைத்து அறிவியல் பாடத்தின் செய்முறை தேர்விற்க்கு (Science practical exam) மாவட்ட கல்வி அலுவலகத்திற்க்கு சென்று தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
பின்னர் ஆன்லைனில் தேர்விற்க்கான Hall Ticket-டை Download செய்து கொள்ளலாம்.
👉 10, +1, +2 தேர்விற்க்கான கால அட்டவணை (Exam Time table) கீழ்காணும் லின்கில் உள்ளது.
https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1729853324.pdf
👉 கூடுதல் விபரங்கள் தமிழக அரசின் கீழ்காணும் அறிவிப்புகளில் தமிழில் உள்ளது, படித்து அறிந்து கொள்ளவும்.
https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1734690779.pdf
ஆக்கம் : S.சித்தீக் M.Tech
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!