182views
புத்தகத்தின் நடுவில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த மனிதரை, எங்களின் கீழை பதிப்பக நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைக்க அவரின் இல்லம் சென்றிருந்தோம்.
முதல் சந்திப்பு, வித்தியசமான அனுபவம். இந்திய அரசியலில் மூத்த பெரும் ஆளுமையின் மிக எளிய வாழ்க்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சிக்கு அவசியம் வர வேண்டும். எங்களின் நூலை வெளியிட வேண்டும் என்ற விரும்பத்தை அவரிடம் தெரியப்படுத்தி இருந்தோம்.
பேராசிரியர் சு.ப.வீரபாண்டியன், ஜவாஹிருல்லா, தோழர்.லெனின், மருத்துவர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் போன்ற ஆளுமைகள் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டிருந்தாலும். தோழர் நல்லக்கண்ணு அவர்கள் கலந்து கெள்வது தான் எங்களின் மிகப் பெரும் விருப்பமாக இருந்தது.
உடல் நலப் பிரச்சனையின் காரணமாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நீண்ட நேரம் பங்கு கொள்வதில் உள்ள சிரமங்களை கூறியிருந்தார்.
நூல் வெளியிட்டு நிகழ்வில் சிறிது நேரம் மட்டும் தாங்கள் கலந்து கொண்டால் சிறப்பாக இருக்கும் என்பதை கூறியிருந்தோம். அதற்க்கு, அப்படி ஒரு நிகழ்விற்க்கு சென்று விட்டு, பாதியில் திரும்பி செல்லும் வழக்கம் எனக்கு கிடையாது. செல்வதாக இருந்தால் முழுமையாக பங்கு கொள்வேன் என்று அவர் கூறியது எங்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மறைந்த நூற்றாண்டு மக்கள் போராளி நல்லகண்ணு என்பது பெயர் அல்ல, அதுவொரு அடையாளம்.
~ முஸம்மில் இப்ராஹிம்
add a comment





