கட்டுரை

320 கிமீ வேகத்தில் செல்லும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் வருகிறது! அதிகாரப்பூர்வ தகவல்!!

255views
முனைவர் என்.பத்ரி
இந்தியாவில் மிக முக்கியமான இரயில் திட்டங்களில் மும்பை-அகமதாபாத் புல்லட் ஒன்றாகும்.இதன் கட்டுமானம் படுவேகமாக தற்போது நடந்து வருகின்றது. இந்நிலையில், இதன் சேவையை தொடங்கப்படுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. இதை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
இதுத் தொடர்பாக அவர் அளித்துள்ள அறிவிப்பில், " இந்த புல்லட் ரயில் 2027 ஆகஸ்ட் 15ஆம் தேதி பொது மக்களின் பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும். முதலில் சூரத் முதல் பிலிமோரா வரை உள்ள பகுதி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.  அதன் பிறகு, வாபி முதல் சூரத் வரை திறக்கப்படும். பின்னர் வாபி முதல் அகமதாபாத் வரை திறக்கப்படும்.. அதன்பிறகு தானே முதல் அகமதாபாத் வரை திறக்கப்படும்.  தொடர்ந்து முழுச் சேவை ஆரம்பிக்கும்" என்று கூறியுள்ளார்.
508 கிலோமீட்டர் தூரமுள்ள இந்த மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டம் நாட்டின் ரயில்வே உட்கட்டமைப்பில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.  மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இயங்கும் இந்த புல்லட் இரயிலில் ஒருவர் மும்பையில் இருந்து அகமதாபாத்திற்குச் சுமார் 2.15 மணி நேரத்திலேயெ சென்றுவிடலாம். இந்த புல்லட் ரயில்த் திட்டம் குறித்த பேச்சு கடந்த 2014ல் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தவுடனேயே தொடங்கியது.இத்திட்டத்தை தொடங்குவதற்கு முன்பு, சீனா மற்றும்
ஜப்பான் என இரு நாடுகளில் உள்ள புல்லட் ரயில் தொழில்நுட்பங்கள் ஆய்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இதை மனதில் கொண்டு நீண்ட ஆலோசனைக்குப் பிறகு ஜப்பான் தொழில்நுட்பத்தில் புல்லட் ரயில் சேவையை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது. 2017ல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் 2023 டிசம்பர் மாதத்திற்குள் இந்த முடிக்கக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற சிக்கல்களால் ஏற்பட்ட தாமதங்கள், திட்டத்தின் காலக்கெடுவை நீட்டித்தன.  தற்போது, இததற்கானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.இச்சூழலில், அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்துப் பணிகளும் முடிந்து படிப்படியாக ரயில் சேவை தொடங்குகிறது.இந்த அறிவிப்பு மும்பை,மற்றும் சூரத் பகுதி மக்களிடையே பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!