கட்டுரை

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்…

10views
நானும், என் பேச்சும் :
இன்று (17/3/2025) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழப் பெற்ற Grand universe Book of Records organized by Pachyderm Tales மாபெரும் விருது வழங்கு விழாவில் அந்நிறுவனத் தலைவர் லக்ஷ்மி ப்ரியா அவர்கள் எழுதிய ‘ரகசியம் ‘ என்ற நூல் குறித்து நான் பேசிய எனது சிறிய வாழ்த்துரை இது.
அனைவருக்கும் வணக்கம்,
பாராட்டுக்கள் ரகசியம் நூல் எழுதிய லக்ஷ்மி ப்ரியா அவர்களுக்கு. அவர்கள் ஆங்கிலத்தில் பல எழுதி இருந்தாலும் அவரது முதல் தமிழ் நூல் இது. அவருக்கு தமிழில் சிறந்த எழுத்து நடை இருக்கிறது என்பதற்கு,  “நாங்க அந்நியராக இருந்து நண்பர்களாக மாறிய நேரம்” என்று அவர் எழுதிய இந்த வரிகளே போதுமானதாக உள்ளது.  முதலில் இந்த சிறுகதை தொகுப்பு பற்றி ஒன்றை சொல்லியாக வேண்டும். இது குழந்தைகளுக்கான புத்தகம் என்று சொன்னார்கள். இது குழந்தைகள் பற்றிய கதைப் புத்தகம். ஆனால் இது பெரியவர்கள் படிக்க வேண்டிய புத்தகம். குறிப்பாக சமீபத்தில்திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆக ப் போகிறவர்கள் படிக்கவேண்டிய புத்தகம். நானும் தொண்டுநிறுவனம் சார்ந்த நண்பர் ஒருவரும் இந்த புத்தகத்தை பள்ளிக்கூடங்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது பற்றி பேசிகொண்டு இருந்தோம்.

அவரிடம் நான் கூறினேன் ஒரு பள்ளியில்சுமார் 300 குழந்தகள் படிக்கிறார்கள் என்றால்அவர்களை ச் சுற்றி ஒரு முப்பது பேர் ஆசிரியர்கள், அலுவலகர்கள் இருப்பார்கள் முதலில்அவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் இது. அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பல அம்சங்கள் இதில் இருக்கிறது என்று கூறினேன்.  என்னைப் பொறுத்தவரை இவர் எழுதியுள்ளகதைகளில் பறக்கும் எழுத்துக்கள் எனும் கதை மிகச் சிறந்த ஒன்று. ‘Learning disability பற்றிய அற்புத மான சிந்தனை ஒரு புரிதல் இதில் உள்ளது. ‘சோடா புட்டியில் இருக்கும் நூரு ரூபா நோட்டு’ எப்பேர்ப்பட்ட கதை தளம். எங்க இருந்தாங்க இந்த லட்சுமி ப்ரியா இவ்வளவு காலம் என்று கேட்கதோன்றியது இதை படிக்கும் போது. இவர் எழுதி யுள்ள பிற கதைகளான குண்டோதரன், ஆட்டிசம், மலை, அலோபீசியா அரேட்டா… இந்த கதை களில் உள்ள கதா பாத்திரங்களை எங்கே இருந்து எடுக்கிறார்கள்என்று ஆச்சரியப் பட்டு போனேன். இவரை போன்றே நானும் எனது கதைகளில் இப்படி பட்ட கொஞ்சம் வித்தியாசமான கேரக்டர் களை வைத்தத் தான் எழுதுவேன். என் கதைகளில் டர்னர் சின்ட்ரோம், இன்டெர்செக்ஸ், மாற்று பாலினத்தோர் குறித்து அதிகம் எழுதுவேன். இவர் எழுத்தைப் படிக்கும் போது அவர் மீது எனக்கு பொறாமை உணர்வுதான் வருகிறது. இவர் தமிழில்இன்னும் பல எழுதி உச்சம் தொட்ட விருது கள் பல பெறுவார் என்று வாழ்த்தி, வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். நன்றி.
இவ்வாறாக என் பேச்சு அந்த அரங்கில் நிகழ்ந்தது.
-ரவிநவீனன்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!