கட்டுரை

48 வது சென்னை புத்தக கண்காட்சி / ரவுண்ட் அப்

27views
நல்ல நண்பர்களுக்கு அடுத்தபடியாக ஒருவன் அடையும் மிகச் சிறந்த பொருள் நல்ல நூல்கள் – கோவ்ட்டன்.
48 வது சென்னை புத்தக கண்காட்சி ஆரம்பமாகிவிட்டது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒரு கண்காட்சிக்காகவே காத்திருக்கும் வாசகர்கள் ஏராளம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை புதுப்பித்து கொள்வதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி.
டிசம்பர் 27 ஆம் தேதி இந்த கண்காட்சி தொங்கியது.  ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைப்பெற இருக்கும் இந்த கண்காட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
சென்னை YMCA உடல் கல்வியல் கல்லூரி நந்தனத்தில் இந்த கண்காட்சி நடைப்பெறுகிறது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் இந்த புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
900 அரங்குகள் நிர்மாணம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து அரங்குகளிலும் வாங்கப்படும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி தரப்படுகிறது.
விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சிக்கு உங்கள் குழந்தைகளுடன் வந்து புத்தகங்களை வாங்கி செல்ல வேண்டும் என்று பப்பாசி வேண்டுகோளை முன் வைக்கிறது.
ஒவ்வொரு நாளும் மாலையில் இங்குள்ள அரங்கத்தில் புத்தக வெளியீடுகள் படைப்பாளர்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் என நிகழ்த்தப்படுகின்றன.
எழுத்தாளர்கள் தங்கள் வாசகர்களை சந்திக்க இங்குவருவதும், தாங்கள் ஆதர்ஸ எழுத்தாளர்களை சந்திக்கவும் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்து கொள்ள விரும்பும் வாசகர்களும் வருவது இந்த இக் கண்காட்சியில் இயல்பாக நிகழும் ஒன்று.
மிகச்சிறந்த புத்தகங்களை படித்துவிடுங்கள். இல்லையென்றால் அதை படிப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடும் –கோரா
புத்தகங்களை வாசியுங்கள் ….மனிதர்களை நேசியுங்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!