17
நெல்லை கவி.க.மோகனசுந்தரம்
இந்த உலகத்தில் நமது மிக முக்கிய சத்ரு நாம் கொள்ளும் கோபம்.
கோபம் என்பது நெருப்பு போல தன்னோடு சேர்ந்தவர்களையும் அது எரித்து விடும்.
கோபம் எவ்வாறெல்லாம் வருகிறது தெரியுமா?
பதட்டத்தில் வரும். நமது இயலாமையில் வரும். நமது ஏக்கத்தில் வரும். நாம் கொள்கின்ற பொறாமையில் வரும்.
நாம் அடைகின்ற தோல்வியில் வரும்.
எந்த வழியே வந்தாலும் அந்தக் கோபத்தை அணை போட்டுத் தடுத்துக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்.
நீங்கள் மேற்கொள்ளும் நிதானம் அதற்கு வழி வகுக்கும்.
ஒரு நிமிடம் மௌனம் அதற்கான தடுப்பு ஊசி.
கோபம் தனியாக வருவதில்லை.
தனது உற்றார் உறவினர்களான சூழ்ச்சி, வஞ்சகம், வன்மம், அறியாமை இவற்றையெல்லாம் கூட்டிக் கொண்டுதான் வரும்.
ஆகவே இயன்றவரை கோபத்தை தவிருங்கள். அதை மடைமாற்ற இயன்ற அளவு முயற்சி செய்யுங்கள்.
அதற்கான வித்தையை கற்றுக் கொள்ளுங்கள்.
தியானம் அதற்கு ஒரு சிறந்த அருமருந்து.
உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பொழுது கோபம் சற்றே பின்வாங்கும். எனவே கோபம் தவிர்த்து – அன்பின் அளவை அதிகரித்து உங்கள் வாழ்க்கையும் பிறர் வாழ்க்கையும் அமைதியாக சென்றிட வழி வகுத்திடுங்கள்.
( தொடர்ந்து பயணிப்போம் )
add a comment