11
நெல்லை கவி.க.மோகனசுந்தரம்
நம்மில் சிலருக்கு சில விஷயங்கள் பிரச்சனை.
சிலருக்கு எல்லாமே பிரச்சனை தான் .
சிலருக்கு எதுவுமே பிரச்சனை இல்லை.
இதிலிருந்து என்ன தெரிகிறது நாம் அணுகும் முறையிலே/ விதத்திலே தான் பிரச்சனையும் /பிரச்சனை இல்லாததும்.
இதற்கு அடிப்படை காரணம் பயம் மற்றும் சந்தேகம்.
இதனால் நமக்கு எதுவும் இழப்பு /ஆபத்து என்ற பயம். அதனாலே அது பிரச்சனையாக தோன்றுகிறது.
இதற்குத் தேவையான தீர்வு/ துணிவு.துணிவு இருந்தால் மலை உச்சியும் காலடியின் கீழ்தான்.
எதில் தான் பிரச்சனை இல்லை?
உங்கள் பார்வைகளை மாற்றுங்கள்.அச்சத்தோடு பார்த்தால் ஊசி முனையும் கூர் வாளாக தோன்றும்.
அச்சம் தவிர்த்து பார்த்தால் கூர் வாளும் முல்லைப் பூவாக தோன்றும்.
முள்ளுக்கு பயந்து ரோஜாவை முகராமல் இருக்கலாமா?
அலைக்கு பயந்து கடலை ரசிக்காமல் இருக்கலாமா?
இடி மின்னலுக்கு பயந்தால் மழை ஏது?
தேர்வு எழுத பயந்தால் தேர்ச்சி ஏது?
பிரச்சனைக்கு பயந்து ஒதுங்குபவர்கள் சமூகத்தில் ஒதுக்கப்படுவார்கள்.
பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒளியாதீர்கள்.
அப்படி நீங்கள் ஒளிந்து கொண்டால் பிரச்சனை அதிகமாகுமே தவிர குறையாது… என்பதை நினைவில் கொள்க.
எதையும் சுமையாக நினைத்தால் அது பிரச்சனையாகத் தான் தோன்றும்.
பதட்டத்தில் உங்கள் பிரச்னையை மற்றவர்கள் பிரச்சனையாக மாற்றி விடாதீர்கள்..
எதில்/ என்ன/எதனால் பிரச்னை என்பதை சிந்தித்து அதற்கு தீர்வு காண யோசியுங்கள்.
உற்ற நண்பர்களிடம் கலந்து உரையாடுங்கள்.
உங்கள் பிரச்னையை நம்பிக்கை உரியவர்களிடம் பகிர்வதால் தவறேதும் இல்லை.
ஒரு நல்ல தீர்வு கிடைக்கலாம்.
பேசுங்கள் /பேசினால் தீராதது எதுவும் இல்லை.
இது போலவே தான் தேசங்களுக்குள் தேவையற்ற பிரச்சனைகளை தானே உருவாக்கிக் கொள்கிறார்கள்.
அவர்களும் மனம் விட்டு பேசினால் அமைதிக்கு பஞ்சம் ஏது?
( தொடர்ந்து பயணிப்போம் )
add a comment