கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : பொறாமையை பொசுக்குவோம்

28views
நெல்லை கவி க.மோகனசுந்தரம்
ஒருவரது பொறாமைக்கு அடிப்படை அவரின் இயலாமை.
ஒருவரது இயலாமையே பொறாமையாக அவதாரம் எடுக்கிறது.
எப்படி அவரால் செய்ய முடிகிறது, அவருக்கு மட்டும் எல்லாம் கிடைக்கிறது, அவருக்கு மட்டும் நடக்கிறது…
எனக்கு ஏன் இல்லை?
என்னால் ஏன் இயலவில்லை?
என்ற இயலாமையின் ஏக்கங்களே
பொறாமையாக உருவெடுக்கிறது.
அத்தகைய பொறாமை தான் ஒருவருக்கு சத்ரு.
பொறாமையால் மனதும் உடலும் சோர்வடையுமே தவிர வேறு எந்த பலனும் கிடைக்காது.
அவனுக்கு என்ன? என்று ஏங்காதீர்கள்.
அவருக்கு என்ன என்பதுஅவருக்குத் தான் தெரியும் ‌.
எல்லாம் அவன் நேரம் என்று சபிக்காதீர்கள்.
அந்த நேரத்தில் அவர் என்ன செய்தார்?
எவ்வளவு முயற்சி செய்தார்?
எவ்வாறு கஷ்டப்பட்டார் என்பதை…
நமது பொறாமை நம்மை உணர விடாமல் தடுக்கிறது.
பொறாமை நம்மை பலவீனப்படுத்தும்.
பொறாமை நம் மூளையை மழுங்கச் செய்யும்.
பொறாமை நம் கவனத்தை திசை திருப்பும்.
பொறாமை நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர விடாது.
நம்மை செயல்பட விடாத பொறாமையை தவிர்ப்போம்.
அத்தகைய பொறாமையை பொசுக்குவோம்.
( தொடர்ந்து பயணிப்போம் )

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!