32
நெல்லை கவி க.மோகனசுந்தரம்
அன்பு நண்பர்களே…
உணர்ந்து முன்னேறுங்கள். இது என்ன புதிதாக இருக்கிறது? உழைத்து முன்னேறுங்கள் என்று தானே சொல்வார்கள். இவன் புதிதாக உணர்ந்து முன்னேறுங்கள் என்று எழுதி இருக்கிறான் என்று யோசிக்கிறீர்களா?
உண்மை உழைத்து தான் முன்னேற வேண்டும். அந்த உழைப்பின் அவசியம், மகத்துவம், அருமை உணராது தீவிரமாக உழைத்து என்ன பயன்?
உங்களது கடினமான உழைப்பு விழலுக்கு இறைத்த நீராக போவதில் என்ன பயன்? பாலைவனத்தில் விதைத்து என்ன பயன்?
பாறையில் உழுது என்ன பயன்?
எதை செய்தால்…என்ன கிடைக்கும் ?எப்படி கிடைக்கும்? எவ்வளவு கிடைக்கும்? என்பதை சிந்திப்பது அவசியம் அல்லவா? பறவைகள் கூட எல்லா மரத்திலும் கூடு கட்டுவதில்லை.
ஒரு காகமானது தனது கூட்டை வடிவமைப்பதை வைத்து அது என்ன காலம் என்பதை உணரலாம்.
அதாவது கூட்டை மழைக்காலத்திற்கு ஒரு மாதிரியும் வெயில் காலத்திற்கு ஒரு மாதிரியும் காகம் கட்டும்.
ஒரு பறவைக்கு இருக்கின்ற முன் யோசனை கூட நமக்கு இல்லை என்றால் என்ன பயன்? அப்படி சூழலுக்கு ஏற்ப, தேவைக்கேற்ப, கிடைக்கப் போகும் பலனை சிந்தித்து, உழைப்பது அவசியம்.
அப்படி நிலை உணர்ந்து உழைத்தால் அந்த உழைப்பு நமக்கும், பிறருக்கும் ஏன் இந்த தேசத்திற்குமே நன்மையாக முடியும்.
உழைப்பு என்பது மிக இன்றியமையாதது. அதை உணர்ந்து உழைப்பது அதைவிட இன்றியமையாதது. ஆகவே உழைப்போம்.உணர்ந்து உழைப்போம்.
நல்லபடியாக முன்னேறுவோம்.
பிறரையும் முன்னேற்றுவோம்.
( தொடர்ந்து பயணிப்போம் )
add a comment