கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : நன்றி மறவேல்

71views
நெல்லை கவி க.மோகனசுந்தரம்
நன்றி இது வெறும் மூன்றெழுத்து சொல்லல்ல. நான்கெழுத்தில் இருக்கும் உணர்வு.
நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் முடிந்து விடுவதில்லை நன்றி கடன் என்பது.
செய்நன்றி அறிதல் என்பதற்கு ஒரு அதிகாரத்தையே 11 இல் அய்யன் தந்திருக்கிறார் என்றால் நன்றியின் அருமையை உணரலாம்.
நன்றி என்பது பெற்றதற்காக அல்ல கொடுத்த உள்ளத்திற்காக.
நன்றி என்பதை சொல்லி விடுவதோடு நிறுத்தி விடாமல் உங்களை நிலை நிறுத்திக் காட்டினால்தான் அந்த வார்த்தைக்கு பெருமை.
பெற்றோருக்கு கொடுக்கும் நன்றி வயோதிகத்தில் அவர்களை நன்றாக பார்ப்பதில் உள்ளது.
ஆசிரியருக்கு கொடுக்கும் நன்றி உங்கள் வாழ்வில் உயர்ந்து வாழ்வதில் உள்ளது.
கணவனுக்கு மனைவியும்… மனைவிக்கு கணவனும் சொல்லிடும் நன்றி அமைதியான ஒழுக்கமான இல்லறம் நடத்திக் காட்டுவது.
வாடிக்கையாளர்கள் ஒரு வியாபாரி தரும் நன்றி தரமானதை கொடுப்பதில் உள்ளது.
ஒரு எழுத்தாளன் காட்டும் நன்றி வாசகர்களுக்கு நல்ல படைப்புகளைத் தருவதில் உள்ளது.
பிறந்த தாய் மண்ணுக்கு நாம் காட்டும் நன்றி ஒரு நல்ல குடிமகனாக வாழ்வது.
எனவே நன்றி மறவாது இருப்போம்.
ஏனெனில் நன்றி வார்த்தையல்ல
ஒரு உணர்வு.
(தொடர்ந்து பயணிப்போம்)

Leave a Response

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!