47
நெல்லை கவி க.மோகனசுந்தரம்
தானத்தில் சிறந்தது நிதானம் என்பார்கள்.
பொறுத்தார் பூமி ஆள்வார் என்றும் கூறுவார்கள்.
நிதானம் பல இன்னல்களுக்கு ஒரு தீர்வு. சரியான முற்றுப்புள்ளி.
சொல்லும் பதில்களில் நிதானம் இருந்தால் வீண் வாக்குவாதத்திற்கு இடமில்லை.
மேற்கொள்ளும் வாகனப் பயணங்களில் நிதானம் இருந்தால் விபத்தும், ஆபத்தும் என்றும் இல்லை.
செய்யும் செயல்களில் நிதானம் இருந்தால் தோல்விகளுக்கு இடமே இல்லை.
வெற்றி பெறும் போது நிதானம் இருந்தால் அது நீடித்து நிலைத்து நிற்கும்.
தோல்விகளில் நிதானம் இருந்தால் அது நம்மை பக்குவப்படுத்தும்.
உங்களின் நிதானம் பலருக்கு பாதை வகுக்கும்.
நிதானம் என்பது சோம்பேறித்தனம் அல்ல.
உங்களின் நிதானம் உங்களுக்கும் நல்லது…பிறருக்கும் நல்லது.
நிதானமாக செயல்பட்ட ஆமை ஜெயித்தக் கதை நாம் அறிந்ததே.
நிதானம் ஆணவத்தை தராது.
அப்படி ஆணவம் தவிர்த்து நாம்
நிதானமாக செயல்படும்போது தேவையற்ற பதற்றம் இருக்காது.
பதற்றம் நம் உடல் ஆரோக்கியத்திற்கும் கேடானது.
அப்படி பதறாத காரியம் சிதறாதே!
நிதானமாக சிந்திக்கும் பொழுது தெளிவான பாதை கிடைக்கும்.
தெளிவான பாதை கிடைத்தால் பயணம் இனிமையாக இருக்கும்.
எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்!
அதைப் போல் இனிமையான வாழ்க்கைக்கு நிதானமே பிரதானம்.
( தொடர்ந்து பயணிப்போம் )
add a comment