170
அதிரகசிய பிரபஞ்ச தேஜஸ் – இந்த மஹாமாயா குகை கோவிலுக்குள் செல்பவர்கள் அனைவரும் பிரபஞ்ச சக்தியின் அருளால் நல்ல பரிமாற்றம் பெறுவது உறுதி. பத்ரி நாராயணன் & ஜெயலக்ஷ்மிஆகியோரால் தெய்வீக ஆர்வத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த உயர்ந்த தெய்வீக கொலு, பல மிஸ்டிகள் பொக்கிஷங்களின் 45 வருட அசாதாரண சேகரிப்பைக் காட்டுகிறது.
இந்த ஆண்டு கொலு “அதிரகஸ்ய பிரபஞ்ச தேஜஸ்” எனப்படும் உயர்ந்த வாழ்க்கைக் நிலையை அடிப்படையாகக் கொண்டது. இதன் இணையற்ற காட்சியை கண்டு களியுங்கள். 1000 + லிங்கங்கள், சாலிகிராமங்கள், ருத்ராட்சங்கள், மனதைக் கவரும் படிகங்கள், படிகப் பாறைகள் மற்றும், பெரிய சங்குகள், கோமதி சக்ரம், விஷ்ணு சக்ரம், மற்றும் பிற கடல் இயற்கை அதிசயங்கள், பித்தளை மற்றும் கல் சிலைகள், பிரமிடுகள் மற்றும் விஷ்ணு சக்கரங்கள் # சிறிய சிலைகள் மற்றும் புனித கலைப்பொருட்கள், இவை 45 வருட காலத்தில் இந்தியா மற்றும் சில வெளிநாட்டு சேகரிப்புகளை காட்டுகிறது. மேலும் மிகப் பெரிய ருத்ராட்ச மலை, கல்பவிருக்ஷம், ஐஸ்வர்ய மரம், மஹாமேரு அலங்கார கோலம், மூங்கில் நீர் விழ்ச்சி, ரெயின்போ கிரிஸ்டல் லிங்கம், நர்மதா லிங்கங்கள் , சிவசக்தி லிங்கம், பாரதமாதா போன்றவற்றில் இருந்து ஆற்றல்களை உணர்ந்து உள்வாங்கி வாழ்க்கையின் பலனை பெறுங்கள்.
பூமிக்கு அடியில் உள்ள மாயப் படிகங்கள், கிரிஸ்டல் கிளஸ்டர், ரத்தினக் கற்கள், எரிமலை கற்கள் போன்ற அபூர்வ விலைமதிப்பற்ற சேகரிப்புகள் மற்றும் பலவித அபூர்வ சங்குகள், பெரிய கிலிஞ்ஜல்கள், முத்து, ஆழமான பெருங்கடலில் உள்ள கற்கள், கர்ம சுத்திகரிப்பு நெருப்பு, விண்வெளியில் இருந்து ஆற்றல் விழிப்புணர்வு மற்றும் அண்ட ஒலி, குகையிலிருந்து வரும் பரிமாற்றும் தாக்கங்கள் ; பிரபஞ்சத்தின் (மஹாசக்தியின் ) ஒரு அறிவு (one sense) படைப்புகளில் இவ்வளவு கருணையும் ஆற்றலும் கொண்டிருக்கின்றன என்றால்; நம் பிரபஞ்ச தாய் மஹாமாயி ஆறு அறிவு (6 sense) உள்ள நம்மின் (மனிதர்களின்) மேன்மைகாக எத்தனை சக்திகள் வழங்கி இருப்பார்கள்.
மஹா சக்தியின் மீது நம்பிக்கை கொண்ட எவரும் அவளது அனுக்ரஹத்தை இங்கு பெறுவார்கள். எனவே இந்த புனிதமான பிரபஞ்ச கொலுவுக்கு வரும் ஒவ்வொருவரும் (குடும்பங்கள்) தங்கள் வாழ்க்கையின் உண்மையான சாராம்சத்தை உணரவைத்து வெற்றி பரிமாணத்தைக் கொடுத்து நித்திய பேரின்ப நிலையை அடைய ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்றால் மிகையாகாது . அனைவரும் வருக ஆனந்தம் பெறுக. இங்கு வரும் அனைவரும் அவர்கள் குடும்பத்தோடு ஆனந்தமாக வாழ்வார்கள். இந்த குகை கோவில் கொலுவிற்கு வரும் அனைவரும் நல்ல சக்தியுடன், மேன்மை படுத்தப்பட்ட மனத்துடன், சுயசக்தி அறிந்து, வாழ்க்கை குறிக்கோளை உணர்ந்து, நல் உறவுடன், வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் வெற்றிப் பெற்று ஆனந்தமாக வாழ்வது உறுதி.
நம் பிரபஞ்ச தாய் (பூமாதேவி, பாரதமாதா, குலதெய்வம், நம்தாய்) மஹாசக்தியின் அருளுடன் அனைவரும் பெண்மையின் மேன்மை உணர்ந்து பொறுப்புடன் செயல் படுவோம். நவராத்திரியின் முக்கிய நோக்கமே பாலிகா, பாலா, கன்யா, குமாரி, யுவதி, சுமங்கலி, மகிளா என்று எல்லா வயது பெண்மையையும் போற்றுவதே.
யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமன்தே தத்ர தேவதாঃ|. யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வஸ்தத்ராபலாஹ் க்ரியாஹ் ||
பொருள்:
பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே தெய்வீகம் மலரும். அவை இல்லாத இடத்தில், எல்லா செயல்களும் பயனற்றதாகவே இருக்கும்.”
எங்கள் வீட்டு கொலுவிற்கு வந்தவர்கள் மற்றும் இந்த கட்டுரையை படிக்கும் அனைவரும் கல்வி, வேலை, பண்பு, செல்வம், திறமை, பெயர், புகழ், பதவி, நல்உறவு, பக்தி மற்றும் பல நற்சக்திகளுடன் அனைத்திலும் பிரபஞ்ச தாய் மஹாசக்தியின் ஆசீர்வாதங்களுடன் வெற்றி பெற்று ஆனந்தமாக வாழ்வீர்கள். நல்வெற்றி வாழ்க்கை வழிகாட்டி.
Dr. பத்ரி நாராயணன்
add a comment