மதுரை, திருப்பாலை நல்லமணி மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பள்ளி பேருந்தில் பயணம் செய்தபோது நெரிசலில் சிக்கி மாணவிகளுக்கு மூச்சு திணறல் – அரசு மருத்துவமனையில் அனுமதி
324views
மதுரை மாவட்டம் திருப்பாலை பகுதியில் செயல்பட்டுவரும் நல்லமணி யாதவ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்துவருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்து மாணவிகளின் வீடுகளுக்கு பள்ளிக்கு சொந்தமான வாகனங்கள் மூலமாக மாங்குளம், பொய்கைகரைபட்டி, அப்பன்திருப்பதி, கள்ளந்திரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 130 க்கும் மேற்பட்ட மாணவிகளை அழைத்துசென்றுள்ளனர்.
அப்போது ஒரே வாகனத்தி்ல் அழைத்துசென்றபோது கள்ளந்திரி அருகே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டதை அறிந்த பள்ளி வாகன ஓட்டுனர் அதே பகுதியில் உள்ள சந்து ஒன்றுக்குள் பள்ளி வாகனத்தை கொண்டுசென்று 30நிமிடமாக நிறுத்தியுள்ளார். இதனால் நீண்டநேரமாக மாணவிகள் பேருந்தில் அடைத்துவைத்திருந்ததால் மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதில் மாணவிகளான ஜனனி, ரம்யா, பாவனா , பிரஜிதா உள்ளிட்ட 10 மாணவிகள் மயக்கமடைந்தனர்.






