தமிழகம்

மாமன்னன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் – தமிழ் தேசிய பாஃர்வட் பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடத்தில் பரபரப்பு புகார் மனு!

66views
இது சம்பந்தமாக தமிழ் தேசிய பாஃர்வட் பிளாக் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் வதிலை செல்வம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த காலங்களில் ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளை மறந்து அனைத்து தமிழ் வாழ்ந்து வரும் இக்காலகட்டத்தில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் என்பவர் இணக்கமாக வாழ்ந்து வரும் மக்களை பிளவு படுத்தும் வகையிலும் அவர்களுக்கிடையே மீண்டும் சாதிய வன்முறைகள் ஏற்படுத்தும் நோக்கோத்தோடும் மாமன்னன் என்கிற திரைப்படைத்தை இயக்கி உள்ளார்.
இந்த திரைப்படம் திரையிடப்பட்டால் அமைதியாக நட்புறவாக இணக்கமாக வாழ்ந்து வரும் தமிழ் சாதிகளுக்கிடையே மீண்டும் சாதிய மோதல்கள் உருவாகி தென் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது.  ஆகையால் இந்த மாமன்னன் திரைப்படத்தை தென் மாவட்டங்களில் திரையிட அனுமதி அளிக்க கூடாது எனவும்,  மேலும் தொடர்ந்து இது போன்ற சாதிய வன்முறைகள் ஏற்படுத்தும் விதமாக திரைப்படங்கள் எடுத்து அமைதியாக இருக்கும் மக்கள் மத்தியில் வன்முறைகளை தூண்டி அதில் ஆதாயம் அடைய நினைக்கும் மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்கள் மீது தமிழ்நாடு அரசு பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு தமிழக மக்களை குறிப்பாக தென் மாவட்டங்களில் அமைதியாக வாழும் மக்களை காக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் இது சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்து உள்ளேன் நல்லது நடக்கும் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!