ஆன்மிகம்

இறைப் புகழ் காணிக்கை

18views
எண்:177
பாடல்:முஹம்மது மஹ்ரூஃப்
ஆகாயம் பூமி அனைத்தும் ஆறு நாளில் படைத்த இறையே
ஆகாயம் பூமி அனைத்தும் ஆறு நாளில் படைத்த இறையே
மேலும் அர்ஷில் நீயும் சமைந்தாய், இறையே
மேலும் அர்ஷில் நீயும் சமைந்தாய்
அதன்மீது ஏக இறையே
ஆகாயம் பூமி அனைத்தும் ஆறு நாளில் படைத்த இறையே
ஆண்டவனே நீயும் அனுப்பி வைத்தாயே தூதர் நபியே
ஆண்டவனே நீயும் அனுப்பி வைத்தாயே தூதர் நபியே
மேலும் இறக்கித் தந்தாய் மறையே, இறையே
மேலும் இறக்கித் தந்தாய் மறையே
புவிதன்னில் ஜிப்ரீல் வழியே
ஆகாயம் பூமி அனைத்தும் ஆறு நாளில் படைத்த இறையே
ஈமானை மனதில் விதைத்தாய்
இணைவைக்காதெம்மை தடுத்தாய்
ஈமானை மனதில் விதைத்தாய்
இணைவைக்காதெம்மை தடுத்தாய்
முழு அழகாய் எமையும் படைத்தாய்
முஸ்லீமாய் தேர்ந்துமெடுத்தாய்
முழு அழகாய் எமையும் படைத்தாய்
முஸ்லீமாய் தேர்ந்துமெடுத்தாய்
மாநபியின் உம்மத்தாக இந்த மண்ணில் பிறக்க வைத்தாய்
மாநபியின் உம்மத்தாக இந்த மண்ணில் பிறக்க வைத்தாய்
மேலும் மனைவி மக்கள்தனையே, இறையே
மேலும் மனைவி மக்கள்தனையே
கண் குளிர எமக்கு அளித்தாய்
(ஆகாயம் பூமி அனைத்தும்)
நபி் காண மனதில் ஏங்க
நாள்தோறும் நானும் தூங்க
நபி் காண மனதில் ஏங்க
நாள்தோறும் நானும் தூங்க
நபி ஸலவாத் நாளும் ஓங்க
நானுரைப்பேன் நன்மை வாங்க
நபி ஸலவாத் நாளும் ஓங்க
நானுரைப்பேன் நன்மை வாங்க
சான்றோர்களோடு நாளை நான் நுழைவேன் சுவனில் தங்க
சான்றோர்களோடு நாளை நான் நுழைவேன் சுவனில் தங்க
மேலும் நபியினருகில் அமர்வேன், இறையே
மேலும் நபியினருகில் அமர்வேன் மனமெங்கும் மகிழ்வு பொங்க
(ஆகாயம் பூமி அனைத்தும்)
அல்லாஹ்வே உனது மறையும்
அருளான நபியின் உரையும்
அல்லாஹ்வே உனது மறையும்
அருளான நபியின் உரையும்
இவை வழியில் வாழும் வரையும்
இல்வாழ்வில் நன்மை விளையும்
இவை வழியில் வாழும் வரையும்
இல்வாழ்வில் நன்மை விளையும்
தாய் தந்தை சேவை தானே உனை விரைந்து வந்து அடையும்
தாய் தந்தை சேவை தானே உனை விரைந்து வந்து அடையும்
மேலும் உன்னில் நானுமழிந்தால்,இறையே
மேலும் உன்னில் நானுமழிந்தால்
உன் நண்பனாக முடியும்
(ஆகாயம் பூமி அனைத்தும்)

Right Click & View Source is disabled.

error: Content is protected !!