ஆன்மிகம்

காணிக்கை : 9 சொல்ல ச்சொல்ல கோமான் நபியே உங்கள் புகழ் தீராதே

18views
எண்:187
பாடல்:முஹம்மது மஹ்ரூஃப்
சொல்ல ச்சொல்ல
கோமான் நபியே
உங்கள் புகழ் தீராதே
கவி தன்னில் முழுதாய் வடிக்க
அன்னைத் தமிழ் போதாதே
உம்மைப் புகழ
வானம் எல்லை
உள்ளம் என்றும் ஓய்வதில்லை
நாளும் தேடலே
நிதம் தோன்றும் பாடலே
சொல்ல ச்சொல்ல
கோமான் நபியே
உங்கள் புகழ் தீராதே
கவி தன்னில் முழுதும் வடிக்க
அன்னைத் தமிழ் போதாதே
சென்ற மதினமூருக்கள்ளே
மெள்ள மெள்ள தீனும் வளர்த்தீர்
உள்ளங்களை சேர்த்து வைத்தீர்
ஒற்றுமையை தான் வளர்த்தீர்
கோபம் இல்லை
வாதம் இல்லை
இனங்களில் பேதம் இல்லை
தூதர் நபி நீங்கள்
ஒளி வீசும் ஜோதியே
ஆதம் நபி முன்னே
நபியான ஆதியே
உம் வாழ்வே காவியம்
அதில் பாடம் ஆயிரம்
(சொல்லச் சொல்ல)
மண்ணில் மறை
வேதம் இறக்கி
எம்மை இங்கே வாழவைக்க
எல்லாம் வல்ல
நாயன் உம்மை
இந்தப் புவியில் தானனுப்பி
தந்தானென்று
போற்றுகின்றேன்
வார்த்தை கோர்த்து பாடுகின்றேன்
வில்லும் இறையென்றால்
எய்த அம்பு நீங்களே
பேசும் பேச்சு யாவும்
அவன் தந்த வார்த்தையே
அல்லாஹ்வின் தூதரே
நீர் என்றும் வேந்தரே
(சொல்லச் சொல்ல)

Right Click & View Source is disabled.

error: Content is protected !!