58
எண்:180
பாடல்: முஹம்மது மஹ்ரூஃப்
காலங்கள் மாறும்
வயதெந்தன் கூடும்
மாறாது எம் காதலே
அண்ணல் நபி மீதில்
எம் காதலே
இந்தப் புவி மீது வாழ்வு
முடிவாகும் முன்னே
நபி காணும் வரம் வேண்டுமே
நாளும் அதுதானே
எம் ஆவலே
காலங்கள் மாறும்
வயதெந்தன் கூடும்
மாறாது எம் காதலே
அண்ணல் நபி மீதில்
எம் காதலே
அருளான வேதம்
அல்லாஹ்வின் போதம்
அதை நாமும் தினமோதுவோம்
அந்த மறைதன்னில் அவனும்
பெயர் சொல்லி அவரை அழைக்காத முறை பேணுவோம்
அருளான வேதம்
அல்லாஹ்வின் போதம்
அதை நாமும் தினமோதுவோம்
அந்த மறைதன்னில் அவனும்
பெயர் சொல்லி அவரை அழைக்காத முறை பேணுவோம்
ஏகன் ஸலவாத்தை நிதமோதுவான்
வானவர் அவனோடு சேர்ந்தோதுவார்
நாமும் ஏராளம் ஓதும் ஏந்தல் புகழ் பாடும் ஏகாந்த
நிலை வேண்டுமே
நாளும் அதுதானே
எம் ஆவலே
(காலங்கள் மாறும்)
நாளை அந்நேரம் தேடி
வரும் நேரம்
எங்கே யாம்
உமைக் காணுவோம்
அன்று நபித் தோழர் கேட்க
நபி சொன்ன பதிலை
நமக்காக அறிவோமே நாம்
நாளை அந்நேரம் தேடி
வரும் நேரம்
எங்கே யாம்
உமைக் காணுவோம்
அன்று நபித் தோழர் கேட்க
நபி சொன்ன பதிலை
நமக்காக அறிவோமே நாம்
மீஸான் அருகே நீர்
எமைக் காணலாம்
பாலம் அருகேயும்
எமைக் காணலாம்
கவ்சர் பானத்தை அருந்த எமை நீரும் காண
விரந்தோடி வர வேண்டுமே
நாளும் அதுதானே
எம் ஆவலே
அன்றாடம் நானும்
அவர்பாடல் பாட
ஆனந்தம் அலைபாயுதே
வானம் பொழிகின்ற மழையாய்
வார்த்தைகள் யாவும்
மன மண்ணில் விழுகின்றதே
அன்றாடம் நானும்
அவர்பாடல் பாட
ஆனந்தம் அலைபாயுதே
வானம் பொழிகின்ற மழையாய்
வார்த்தைகள் யாவும்
மன மண்ணில் விழுகின்றதே
நாயன் அருளால்
அது மரமாகுமே
பாடல் காயாக வெளியாகுமே
ராகம் சுவையாக சேர
கனியாக மாற கவியாக வரவேண்டுமே
நாளும் அதுதானே எம் ஆவலே
காலங்கள் மாறும்
வயதெந்தன் கூடும்
மாறாது எம் காதலே
அண்ணல் நபி மீதில்
எம் காதலே
இந்தப் புவி மீது வாழ்வு
முடிவாகும் முன்னே
நபி காணும் வரம் வேண்டுமே
நாளும் அதுதானே
எம் ஆவலே
add a comment