தமிழகம்

பாரம்பரிய சிறுதானிய உணவுத்திருவிழா மற்றும் இலக்கிய மன்ற விழா

34views
தமிழ்த்துறை சார்பாக 09.01.2025 அன்று “பாரம்பரிய சிறுதானிய உணவுத்திருவிழா மற்றும் இலக்கிய மன்ற விழா” நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் மற்றும் துணைமுதல்வர் முஸ்தாக் அகமது கான் நிகழ்வினை துவக்கி வைத்தனர். நிகழ்வில் 53 மாணவிகள் குழு போட்டியாளர்களாகவும், 73 மாணவிகள் தனி போட்டியாளர்களாகவும் பங்கேற்று தமிழர் பாரம்பரிய சிறுதானிய உணவுகளை காட்சி படுத்தினர். சிறந்த படைப்புக்கு பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற இலக்கிய மன்ற விழாவில் துறைத்தலைவர் இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி துணைமுதல்வர் முஸ்தாக் அஹமது கான் தலைமையுரையாற்றினார். உதவிப்பேராசிரியர் அப்துல் ரஹீம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக திருச்சி, உருமு தனலட்சுமி வித்யாலயா பள்ளி, மேனாள் தமிழ் ஆசிரியர், இரா. மாது கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் தமிழ்த்துறை மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர். இறுதியாக உதவிப்பேராசிரியை ஷிபா நன்றி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!