சினிமா

“பெர்ஃபெக்ட் பிக்சர் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், “தருண் குமார் பாப்னா” தயாரிப்பில் வெளிவர தயாராக இருக்கின்ற படம் “மைத்ரி”

74views
“பெர்ஃபெக்ட் பிக்சர் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், “தருண் குமார் பாப்னா” தயாரிப்பில் வெளிவர தயாராக இருக்கின்ற படம் “மைத்ரி”
அறிமுக இயக்குனர் பரத்.JS ஆல் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இயக்குனர் ‘பரத்.JS’ கதாநாயகனாகவும், ‘காயத்ரி ஷான்’ கதாநாயகியாகவும், நந்தன், ரவி ஏழுமலை, ‌ஸ்ரீதர், சிவாங்கி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
மலையாளத்தில் 2023-24ல் வெளியான அனுராகம், பாலும் பழமும் படங்களின் இசையமைப்பாளர் ‘ஜோயல் ஜான்ஸ்’ தமிழில் அறிமுகமாகிறார்.
இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோகப்பிரிவு செயலாளர் ‘நந்தகோபால்’, திரைப்பட விநியோகிஸ்தர் ‘விவேகானந்தா’, திரைப்பட இயக்குனர் ‘மீரா கதிரவன்’, விருந்தினர்களாக பங்கேற்றனர்.
சமூகத்தில் காதலும் காதலர்களும் சந்திக்கும் சமூக சிக்கல்களையும், மானுட பரிதவிப்புகளையும் சம காலத்தில் இருக்கும் சமூக பிரச்சினைகளை பேசும் படமாக இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பரத்.JS.
இத்திரைப்படத்தில் எழுத்தாளர்கள் யுகபாரதி, குட்டி ரேவதி, வாசன், பா.இராஜா, இளமாறன்(அறிமுகம்) பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.
விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர் மீரா கதிரவன், சிறிய படங்களுக்கு எப்போதும் பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் தியேட்டரில் மூன்று நாட்களுக்கு மேல் சிறிய படங்கள் திரையிடப்படுவதே இங்கு சிரமமாக இருக்கிறது.
முன்பெல்லாம் லேட் பிக்கப் பாக பல படங்கள் ஒரு வாரத்திற்கு பிறகு வெற்றிப்படங்களாக மாறியிருக்கிறது.  ஆனால் இன்று அதற்கான சாத்தியங்கள் இல்லை. இந்த சமயத்தில் “மைத்ரி” போன்ற சமூக அக்கறையுள்ள படங்கள் வெற்றிபெறவேண்டியது அவசியம். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!