சினிமாவிமர்சனம்

“ஆடியன்ஸ் மனதை கடத்தும் சாத்தியங்கள் அதிகம்”

103views
பரம்பொருள் : திரை விமர்சனம்
சிலை கடத்தல் பின்னணியில் சற்றும் எதிர்பாராத கோணத்தில் கதை சொல்ல வந்திருக்கும் புதுமுக இயக்குனரின் அதிரடி திரைப்படம் ‘பரம்பொருள்’
நாகபட்டணத்தில் நிலத்தை தோண்டும் போது ஒரு விவசாயிக்கு ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஐம்பொன் புத்தர் சிலை ஒன்று கிடைக்கிறது. அதை விற்க நினைக்கிறார். சிலைகடத்தல் கும்பல் அவரை கொலை செய்துவிட்டு சிலையுடன் தப்பிவிடுகிறது.
அந்த கும்பலில் தலைவன் சற்குணபாண்டியன் விபத்தொன்றில் இறந்து விடுகிறார். அவரிடம் ஆர்ட் கேலரியில் வேலை செய்த ஆதி என்கிற இளைஞன் அந்த சிலையை தான் எடுத்து வந்து வீட்டில் பத்திரப்படுத்துகிறான். ஒரு நாள் இரவு மைத்திரேயன் என்ற இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட செல்லும் போது மாட்டிக்கொள்கிறான். அதன் பிறகு தான் கதையின் ஓட்டத்தில் ஒரு வேகம் தொற்றிக்கொள்கிறது.
ஆதியும் , மைத்ரேயனும் சிலைகடத்தல் கும்பலை பிடிக்க செல்லும் போது ஒரு சிலை கிடைக்கிறது. ஆதி தன் தங்கையின் மருத்துவ செலவிற்கு பணம் தேவை என்பதாலும், தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவின் பராமரிப்பில் இருக்கும் மகளின் எதிர்காலத்திற்கு பணம் தேவை என்பதற்காக மைத்ரேயனும் அந்த சிலையை எப்படியாவது விற்பனைசெய்து ஆளுக்கு பாதியாக எடுத்து கொள்வது என முடிவு செய்கின்றனர்.
சிலை விற்பனையானதா….எதிர்பாத்தாற்போல் பணம் பகிர்ந்து கொள்ளப்பட்டதா ..என பல்வேறு கேள்விகளுக்கு விடைதான் மீதி கதை.

‘பரம்பொருள்’ – தலைப்பை வைத்த குழுவிற்கு முதலில் பாராட்டு சொல்லவேண்டும்.
மைத்ரேயனாக சரத்குமார் ஒரு மிடுக்கான இன்ஸ்பெக்டராகவே வாழ்ந்திருக்கிறார். ஆதியாக அமிதாஷ் அலட்டல் இல்லாத நடிப்பால் கவர்கிறார். மைத்ரேயனின் மச்சினியாக வரும் யாழினி கதாபாத்திரத்தில் சிறிதளவே வந்தாலும் காஷ்மீரா திரையில் ஒரு சிற்பமாகவே ஜொலிக்கிறார். டி.சிவா ஒரு சில காட்சிகளில் தலைகாட்டுகிறார். வின்சென்ட் அசோகன், V பாலகிருஷ்ணன் சிலைகடத்தல் விற்பனையாளர்களாக வந்திருக்கின்றனர். இயக்குனர் பாலாஜி சக்திவேலின் நடிப்பு இயல்பாக இருக்கிறது. பவா செல்லத்துரையை படத்தில் பார்க்க முடிகிறது.

கவி கிரியேஷன்ஸ் மனோஜ்-கிரிஷ் தயாரித்து இருக்கின்றனர்.
படத்தின் ஒளிப்பதிவவாளர் S பாண்டிக்குமார் கவனம் பெறுகிறார். ஒரு திரில்லர் கதையில் காட்சிகளுக்கு ஏற்ப தேவையான லைட்டுகளை பயன்படுத்திருப்பது பாராட்டும்படி இருக்கிறது.
நாகூரான் ராமச்சந்திரனின் பாடத்தொகுப்பு படத்திற்கு கூடுதல் பலம்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அதிரிபுதிதான். ‘அசைவின்றி அசைவின்றி உன் முன் நின்று கேட்கின்றேன்’ யுவன் ஸ்டைல்.
உலகத்திற்கு ஒரு விலையும் இருக்கா வாங்கணும் அதை ஒரு நாளில் – சதிஷ் நடன அசைவுகள் ஏ-கிளாஸ். பாராட்டலாம்.
திலீப் சுப்பாராயனின் சண்டைப்பயிற்சி ஓகே ரகம்.
சி.அரவிந்தராஜ் நேர்த்தியாக காட்சிகளை தொய்வில்லாத திரைக்கதை மூலம் நகர்த்தி இருக்கும் பாங்கு சிறப்பு. புது முக இயக்குனருக்குரிய அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

‘சாமி நம்மை காப்பாத்தும்னு நினைச்சா இப்போ அந்த சாமியை காப்பாற்றும் நிலையில் நாம் இருக்கோம்’ என்று சிலை கடத்தல் தடுப்பு ஐஜி பேசும் வசனம் தரம்.
இடைவேளையில் சிலை உடைந்துவிட அடுத்து என்ன நடக்கும் என்கிற பரபரப்பரப்பை ஆடியன்ஸுக்கு கடத்தியிருப்பதில் தெளிவான பார்வையை பார்க்க முடிகிறது.
கிளைமாக்ஸ் எதிர்பாராத டிவிஸ்ட்.
மொத்தத்தில் பரம்பொருள் – ஆடியன்ஸ் மனதை கடத்தும் சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!