சினிமா

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கிய ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது

23views
முன்னணி நடன இயக்குநர் கலைமாமணி ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி, தனது மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், கலைத் துறையில் பங்களித்து வரும் கலைஞர்களைக் கௌரவிக்கும் நோக்கிலும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, அகாடமியின் பிரம்மாண்டமான ‘டான்ஸ் டான் 2’ நிகழ்ச்சி ஜூலை 25 அன்று சென்னை வேல்ஸ் கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக இதுவரை இல்லாத வகையில் ஒரு சிறப்பு முன்னெடுப்பை ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி மேற்கொண்டது.
இந்த நிகழ்வில், 1973 முதல் 2026 வரை தமிழ்த் திரைத்துறையில் பங்களித்த 125 நடன இயக்குநர்கள்* மற்றும் *தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 38 நடனப் பள்ளி ஆசிரியர்கள் ஒரே மேடையில் கௌரவிக்கப்பட்டனர். மேலும், ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி மாணவர்களின் விறுவிறுப்பான மற்றும் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.
நிகழ்ச்சியில் பேசிய நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டர் கூறுகையில், “பல ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வரும் நான், நமக்கு முன்னர், நம்முடன் மற்றும் நமக்குப் பின்னர் பணியாற்றிய நடன இயக்குநர்கள் குறித்த ஒரு விரிவான தேடலை மேற்கொண்டேன். பல்வேறு ஆதாரங்களை சேகரித்தபோது, 1973 முதல் 2026 வரை திரைத்துறையில் நடன இயக்குநர்களாக பங்களித்த 125 பேர் இருப்பது தெரியவந்தது.

அவர்களில் சிலர் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திரைப்படங்களிலும் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களையும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நடனப் பள்ளிகளை நடத்தி வரும் 38 ஆசிரியர்களையும் ஒரே மேடையில் கௌரவிக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “இந்த 125 நடன இயக்குநர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தற்போது போதிய வாய்ப்புகள் இல்லை. அதேபோல், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நடனப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது பணியை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த நிகழ்வின் மூலம் நடன இயக்குநர்களுக்கு புதிய வாய்ப்புகளும், நடனப் பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய அங்கீகாரமும், ஊக்கமும் கிடைத்தால் அதுவே இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!