சினிமா

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தனக்கு வாக்களித்தவர்களுக்கு நடிகர்-தயாரிப்பாளர் ஏ.எல். உதயா மனமார்ந்த நன்றி

51views
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தனக்கு வாக்களித்தவர்களுக்கு நடிகர்-தயாரிப்பாளர் ஏ.எல். உதயா மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையிலான அணியினருக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “நடந்து முடிந்துள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் எந்த அணியையும் சாராமல் துணைத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக நான் போட்டியிட்டேன். என்னை ஒரு நடிகராக மட்டுமே பார்க்காமல் தயாரிப்பாளராகவும் அங்கீகரித்து 230 வாக்குகளுக்கு மேல் அளித்த சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றும் நான் கடமைப் பட்டுள்ளேன்.
தயாரிப்பாளர்கள் சங்க வளர்ச்சிக்காகவும், உறுப்பினர்களின் நலனுக்காகவும் என்றும் நான் துணை நிற்பேன். தேர்தலில் வெற்றி பெற்ற ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையிலான அணியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய நிர்வாகிகள் தமிழ் திரையுலகின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என நான் நம்புகிறேன்.
வெற்றி பெற்ற தமிழ்க்குமரன் அவர்கள், ராதாகிருஷ்ணன் அவர்கள், கதிரேசன் அவர்கள், சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், ஆர். கே. சுரேஷ் அவர்கள், கமலக்கண்ணன் அவர்கள், சுஜாதா விஜயகுமார் அவர்கள் உள்ளிட்ட அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் காலத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிறைய நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.
அன்புடன்,
ஏ.எல். உதயா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!