சினிமா

பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் வெளியான‌ ‘ஜாக்கி’ திரைப்படம் நான்காவது வாரமாக வெற்றிநடை போடுகிறது

68views
மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான மட் (Mud) ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக உருவான ‘மட்டி’ திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி பாராட்டுகளைப் பெற்ற டாக்டர் பிரகபல் இயக்கத்தில் அடுத்து உருவான திரைப்படம் ‘ஜாக்கி’. கடந்த ஜனவரி 23ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஜாக்கி’ நான்கு வாரங்களாக வெற்றிநடை போட்டு வருகிறது.
பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கியுள்ள‌ ‘ஜாக்கி’, மதுரையை களமாகக் கொண்டு நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு உருவான முதல் படம் ஆகும். மண் மணத்துடனும் மண்ணின் மைந்தர்களின் குணத்துடனும் இப்படம் திகழ்கிறது.
சிகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுகளை ஜாக்கி அள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய இயக்குநர் டாக்டர் பிரகபல், “இன்றைய லகட்டத்தில் ஒரு திரைப்படம் சில தினங்களை கடப்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் ‘ஜாக்கி’ நான்கு வாரங்களாக‌ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். தரமான படங்களை என்றும் ஆதரிக்கும் தமிழ் ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி,” என்றார்.
‘ஜாக்கி’ திரைப்படத்தில் இயக்குநர் டாக்டர் பிரகபல்லின் முதல் படமான ‘மட்டி’ திரைப்படத்தில் நடித்த யுவான் கிருஷ்ணா மற்றும் ரிதான் கிருஷ்ணாஸ் முக்கிய வேடங்களில் நடிக்க, அம்மு அபிராமி கதை நாயகியாக நடித்துள்ளார். திரைப் பிரபலங்கள் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைக்க, உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஸ்ரீகாந்த் மேற்கொண்டார். கிரியேட்டிவ் ப்ரொடியூசராக ஆர்.பி. பாலா பணிபுரிந்துள்ளார். புரொடக்ஷன் கன்ட்ரோலர்: எஸ். சிவகுமார், கலை இயக்குநர்: சி. உதயக்குமார், ஆடியோகிராபி: எம்.ஆர். ராஜாகிருஷ்ணன், சண்டை பயிற்சி: ஜாக்கி பிரபு, உடைகள்: ஜோசுவா மேக்ஸ்வெல் ஜே, ஒப்பனை: பாண்டியராஜன், கலரிஸ்ட்: ரங்கா.
பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள ‘ஜாக்கி’ தொடர்ந்து நான்கு வாரங்களாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!