சினிமா

தலை நிமிர் திரை விருதுகள் 2026 – திரையுலக சாதனையாளர்களுக்கு பெருமை சேர்த்த விழா

74views
தமிழ் திரைப்படத் துறையின் சிறப்பையும், புதிய தலைமுறை திறமைகளையும் பாராட்டும் வகையில் தலை நிமிர் திரை விருதுகள் 2026 விழா, சென்னை பிரசாத் லேப் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. திரையுலகின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களும், எதிர்கால நம்பிக்கையான இளம் கலைஞர்களும் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த விழாவில், பிரபல திரைப்பட இயக்குநர் பேரரசு அவர்கள், நடிகர் கதிரவன், நடிகை ஸ்ருதி நாராயணன், நடிகை தியா, நடிகர் காதல் சுகுமார் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். பல்வேறு திரைப்படப் பிரிவுகளைச் சேர்ந்த கலைஞர்கள் இவ்விழாவில் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது விழா சிவானி ஸ்டூடியோ சார்பில், செந்தில் மற்றும் டைகர் சக்கரவர்த்தி,டைகர் முத்து ஆகியோரின் ஏற்பாட்டில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மேலும், இவ்விழாவில் முதன்மை விருந்தினர்களாக மூத்த இந்திய திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், இயக்குநர் பேரரசு, சண்டைப் பயிற்சியாளர் கனல்கண்ணன், மற்றும் மூத்த திரைப்பட இயக்குநர் ஆர். அரவிந்த்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி விழாவை சிறப்பித்தனர்.
தமிழ் திரையுலகின் வளர்ச்சிக்கும், புதிய திறமைகளின் ஊக்கத்திற்கும் உறுதுணையாக அமைந்த தலை நிமிர் திரை விருதுகள் 2026, கலைஞர்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் ஒரு முக்கியமான மேடையாக திகழ்ந்தது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!