சினிமா

உயிர் மூச்சு திரைப்பட தயாரிப்பாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டிய நடிகர் ராமராஜன்.

1.25Kviews
வெற்றிகரமாக தூத்துக்குடி சத்யா திரையரங்கில் 124 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் உயிர் மூச்சு திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடி கொண்டிருக்கும் தருவாயில். தயாரிப்பாளர் அத்திமரப்பட்டி விவசாயி ஜோதி மணிக்கு ஒரு போன் கால் வருகிறது.
எதிர்முனையில் பேசியவர் முதலில் அவரை அறிமுகப்படுத்துகையில் தயாரிப்பாளருக்கு நம்ப முடியவில்லை.  உண்மையில் நீங்கள் தான் பேசுகிறீர்களா என்று ஒரு முறை தயாரிப்பாளர் ஜோதிமணி உறுதிப்படுத்திக் கொண்டார்.
எதிர் முனையில் பேசியவர் நான்தான் நடிகர் ராமராஜன் பேசுகிறேன் என்று சொன்னவுடன் தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி மிகுந்த சந்தோஷம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்.,போனில் உயிர் மூச்சு திரைப்படத்தை பற்றியும் அதில் நடித்த நடிகர்களை பற்றியும் பேசியது தயாரிப்பாளரை புல்லரிக்க வைத்தது.
நடிகர் ராமராஜன் அவர்கள் தயாரிப்பாளர் நம்பரை தேடி கண்டுபிடித்து பேசியது சாதாரண நிகழ்வல்ல. 2025 ஆம் ஆண்டு தமிழகத்தில் எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் உயிர் மூச்சு திரைப்படம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.. அதாவது இந்த வருடத்தில் 100 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் ஒரே திரைப்படம் என்ற பெயரை பெற்றுள்ளது உயிர் மூச்சு திரைப்படம்.
சாதாரணமாக எடுக்கப்பட்ட உயிர் மூச்சு திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் ஒரு பேசும் பொருளாகியுள்ளது.  குறிப்பாக ராமராஜன் அவர்கள் தயாரிப்பாளர் அத்திமரப்பட்டி விவசாயி ஜோதி மணியிடம் பேசியது…, உயிர் மூச்சு திரைப்படம் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது சினிமா நடிகர்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.. என்பதை தெளிவுபடுத்துகிறது.

ஒரு கலைஞனுக்கு பணம் முக்கியமா! பாராட்டு முக்கியமா? என்றால் பாராட்டு தான் முக்கியம்…. அந்தப் பாராட்டை ஒரு மனிதனுக்கு கொடுப்பதற்கு ஒரு பெரிய மனது வேண்டும்.  அந்தப் பெரிய மனது கொண்டவர்தான் நடிகர் ராமராஜன்.  சினிமாவில் அறிமுகம் இல்லாத.. பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணாத… தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில்… நல்ல திரைக்கதை.., அம்சமான வசனத்துடன் உருவான உயிர் மூச்சு திரைப்படத் தயாரிப்பாளரின் போன் நம்பரை தேடி கண்டுபிடித்து பாராட்டுவதற்கும் ஒரு மனம் வேண்டும் அந்த மனம் கொண்டவர் தான் நடிகர் ராமராஜன்.
சீக்கிரம் தமிழகம் முழுவதும் திரைப்படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்று நடிகர் ராமராஜன் சொன்னது ..உயிர் மூச்சு திரைப்பட குழுவினராகிய எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.
விரைவில் உயிர் மூச்சு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. உயிர் மூச்சு திரைப்படத்திற்கு ஒரு வரவேற்பை தாருங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறார் இயக்குனர் பிராட்வே சுந்தர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!