சினிமா

இயக்குனர் பிராட்வே சுந்தர் இயக்கும் அடுத்த திரைப்படம் பேட்ஸ்மேன்.

527views
இந்தத் திரைப்படத்தை எஸ்.எஸ். விஷுவல் வென்ஞ்சர்ஸ் சார்பாக மணிகண்டன் தயாரிக்கிறார்., கதை, திரைக்கதை, வசனம் அனைத்தையும் தயாரிப்பாளராக இருக்கும் மணிகண்டன் செய்து இருக்கிறார்.
நடிகர் மீசை ராஜேந்திரன் இந்த திரைப்படத்தில் ப்ரொடக்ஷன் கண்ட்ரோலராக இருக்கிறார்.
பேட்ஸ்மேன் திரைப்படம் ஒரு கிராமத்து கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து உருவாக இருக்கும் திரைப்படமாகும்.  முக்கிய நடிகர்கள் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் இருந்து படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.  கருப்பு பக்கம் திரைப்படத்தில் நடித்த நடிகர் ராஜ்கபூர் மற்றும் சுமங்கலி சதீஸ் ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.
இதற்கு முன்னதாக பிராட்வே சுந்தர் இயக்கிய உயிர் மூச்சு திரைப்படம் தூத்துக்குடியில் சத்யா திரையரங்கில் கிட்டத்தட்ட 120 நாட்கள் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.. என்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!